சபரிமலை சன்னிதானத்தில் தயார் நிலையில் அவசர மருத்துவ சேவை ஊர்தி !
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2016 05:11
சபரிமலை: சன்னிதானத்தில் நோய்வாய்படும் பக்தர்களை விரைவாக பம்பைக்கு கொண்டு செல்ல வசதியாக நடப்பு சீசனில் அவசர மருத்துவ சேவை ஊர்தி வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் சன்னிதானம் ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டுள்ளது.
சன்னிதானத்தில் விபத்தில் சிக்குபவர்கள் மற்றும், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் போது அவர்களை ஐயப்பா சேவா சங்க தொண்டர்கள் ஸ்டிரெச்சரில் துõக்கி செல்ல வேண்டும். இவ்வாறு செல்லும் போது ஒரு மணி நேரம் ஆகி விடும். இதனால் பக்தர்களின் உயிரை காப்பதில் பிரச்னை இருந்தது. எனவே நடப்பு சீசன் முதல் சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு அவசர மருத்துவ சேவை ஊர்தி இயக்க முடிவு செய்யப்பட்டது. ஜீப் வடிவில் உள்ள இந்த ஊர்தியில் இரண்டு ஸ்டிரெச்சர்கள் வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்தி சன்னிதானத்தில் இருந்து 10 நிமிட நேரத்தில் பம்பை செல்ல முடியும். இதன் மூலம் பக்தர்கள் உயிரை காக்க முடியும். சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் இந்த ஊர்தியை காணிக்கையாக வழங்கியுள்ளார். கேரள ஐகோர்ட் மற்றும் வனத்துறையின் அனுமதியுடன் இந்த வாகனம் இயக்கப்படுகிறது. தற்போது இந்த ஊர்தி சன்னிதானம் அரசு ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.