பதிவு செய்த நாள்
18
நவ
2016
05:11
சபரிமலை: சபரிமலை வரும் பக்தர்களிடம் ஓட்டல்களில் அதிக பணம் ஈடாக்குவதை தடுக்கும் வகையில் உணவு பொருட்களின் விலை பட்டியலை பத்தணந்திட்டை கலெக்டர் அறிவித்துள்ளார். இதை மீறி பணம் வசூலிக்கும் ஓட்டல்கள் பற்றிய தகவல் தெரிவிக்க இலவச டெலிபோன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையிலும், சபரிமலை வரும் பாதைகளிலும் பக்தர்கள் பேசும் மொழியை வைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபற்றி ஏராளமான புகார்கள் வந்த நிலையில் பத்தணந்திட்டை கலெக்டர் தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டு அதில் உணவு பொருட்களின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை பட்டியல் அனைத்து ஓட்டல்களில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விலை விபரம் ரூபாய் மதிப்பில் வருமாறு: முதலில் கொடுக்கப்பட்டுள்ள விலை சன்னிதானத்திலும், இண்டாவது கொடுக்கப்பட்டுள்ள விலை பம்பை, நிலக்கல், ளாகா, துலாப்பள்ளி ஆகிய இடங்களிலும் வசூலிக்கப்படும்.
டீ- 10-9, காப்பி 10-11, பிளைன் காப்பி/டீ 8-7, சீனி இல்லாத டீ-காப்பி 9-8, மெஷின் காப்பி-டீ 14-13, போர்ண்விட்டா-ஹார்லிக்ஸ்15-14, பருப்பு,உளுந்து வடை 11-10, போண்டா 9-8, ஏத்தன் பழம் பஜ்ஜி 11-10, பஜ்ஜி 8-7, தோசை, இட்லி- சட்னி சாம்பார் உட்பட 1-க்கு 9-8, சப்பாத்தி-பூரி 1-க்கு 9-8, புரோட்டா 1-க்கு 10-9, ஆப்பம், இடியாப்பம் 1-க்கு 9-8, நெய்ரோஸ்ட் 38-35, மசால் தோசை 45-40, பட்டாணி மசால், சுண்டல் கடலை கறி, உருளை கிழங்கு கறி, உப்புமா ஒரு பிளேட்டுக்கு 22-20, ஆனியன் ஊத்தப்பம் , தக்காளி ஊத்தப்பம் 55-50, வெஜிட்டபிள் குருமா, பருப்பு குருமா ஒரு பிளேட்டுக்கு 20-18. சாப்பாடு- பச்சரிசி சாதம் 55-50, சாப்பாடு- புழுங்கல் அரிசி சாதம் 52-48. சாம்பார், ரசம், புளிசேரி, மோர், அவியல், துவரன், ஊறுகாய் உட்பட.வெஜிட்டபிள் பிரியாணி 55-50, கஞ்சி - பயறு, ஊறுகாய் உட்பட 30-28, தயிர் சாதம் 45-43, லெமன்சாதம் 43-40, பாயாசம் 15-12, மரச்சீனி, தக்காளி பிரை 30-28, தயிர் 12-10.
இந்த கட்டணங்களை தவிர்த்து அதிக கட்டணம் வசூலித்தால் பக்தர்கள் 1800 425 1606 என்ற எண்ணில் இலவசமாக பேசி புகார் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.