கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் பக்தர்களுக்கு உதவ சபரிமலை ஹெல்ப்டெஸ்க்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2016 12:11
சபரிமலை: சபரிமலைக்கு விமான மார்கம் வரும் பக்தர்களுக்கு உதவுவதற்காக சபரிமலை ஹெல்ப் டெஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தேவசம்போர்டு உறுப்பினர் அஜய்தரயில் தொடங்கி வைத்தார். வெளி மாநிலங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்து அங்கிருந்து காரில் சபரிமலை வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் உள்நாட்டு டெர்மினலில் அரைவல் பகுதியில் ஹெல்ப் டெஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் சபரிமலை செல்வதற்கான உதவி செய்து கொடுக்கப்படும். சபரிமலையில் முக்கிய வழிபாடுகள் மற்றும் அப்பம் அரவணை பிரசாத கூப்பணும் இங்கு கிடைக்கும். காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த டெஸ்க் செயல்படும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் அஜய்தரயில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விமான நிலை இயக்குனர் எ.சி.கே. நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விமானம் மூலம் வரும் சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஜன., 19 வரை ட்ரூஜெட் ஏர்லைன்ஸ் விமானம் தினமும் ஐதராபாத்தில் இருந்து கொச்சிக்கு சிறப்பு விமான சர்வீஸ் இயக்குகிறது. தினமும் நள்ளிரவு 11.50 ஐதராபாத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் 12.50-க்கு கொச்சி வந்தடையும். அதிகாலை 1.15-க்கு திரும்ப ஐதராபாத் புறப்பட்டு செல்லும்.