பதிவு செய்த நாள்
21
நவ
2016
12:11
திருப்பூர் : ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூரில், ரத ஊர்வலம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதிகள் சார்பில், ஸ்ரீ சத்ய சாய்பாபா, 91வது பிறந்த நாளை முன்னிட்டு, பால விகாஸ் குழந்தைகள், சாய் பக்தர்கள் பங்கேற்ற, ஸ்ரீ சத்ய சாய்பாபா, ரத ஊர்வலம் நேற்று நடந்தது. முத்து நகர், விநாயகர் கோவிலில் துவங்கிய ஊர்வலத்துக்கு, திருப்பூர் மாவட்ட ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி தலைவர் சாய் சுப்ரமணியம் தலைமை வகித்தார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., குண சேகரன், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சாய் பஜனை, வேதங்கள் முழங்க பிரதான ரோடுகளில் ஊர்வலம் சென்று, பி.என்.,ரோடு, ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி, சமூக நல மையத்தில் நிறைவடைந்தது. இதில், பள்ளி குழந்தைகள், சத்யசாய் பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.