நாமக்கல்: கிறிஸ்து அரசர் தேவாலய பெருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு தேர் பவனி நடந்தது. நாமக்கலில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலய தேர்விழா, ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. அதன்படி இந்தாண்டு கடந்த வாரம் கொடியேற்று ஏற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. நேற்று தேர்பவனி நடந்தது. சேலம் மறை மாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் திருநாள் திருப்பணி நடந்தது. அதையெடுத்த தேர்பவனி நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட மின் தேரில், எழந்து அருளிய கிறிஸ்து அரசர் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினர்.