Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேசத்தின் மீது பாசம் செலுத்துங்கள்! அஷ்டதள பாதபத்மாராதனம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அறம் வளர்க்கும் அன்னை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2016
03:11

தமிழ் நாட்டிலே எத்தனை எத்தனையோ சிவன் கோயில்கள். அத்தனை கோயில்களிலும் அம்பிகைக்கும் சன்னிதி உண்டு. இந்த அம்பிகைகள் எல்லாம், அந்த மலையரையன் பொற்பாவை வாள் நுதலான் பெண் திருவுருவின் மூர்த்தமே என்றாலும், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே வேறு வேறு பெயராலேயே அழைக்கிறார்கள் கவிஞர்கள், கலைஞர்கள், பக்தர்கள்.

வண்டமர் பூங்குழலி, ஏலவார் குழலி, மட்டுவார் குழலி என்று அவள்தன் குழல் அழகிலேயே மெய்மறந்து நிற்பவர்கள் உண்டு. தேனார் மொழியாள், யாழைப் பழித்த மொழியாள் என்று அவளது கரும்பன்ன சொல்லிலேயே மயங்குபவர்களும் உண்டு. அத்துடன் அவளை அறம் வளர்க்கும் அன்னையாகவும் உருவகப்படுத்திப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள் கலைஞர்கள். பால் நினைந்து ஊட்டும் தாயின் அன்பைப் பாடிய மாணிக்கவாசகர்.

தாயாய் முலையைத் தருவானே
தாராது ஒழிந்தால், சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ

என்று உள்ளம் உருகப் பாடுகிறார். ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றும் இறைவனை, தாயவன்காண்  உலகிற்கு தன்னொப்பில்லா தத்துவன்காண் என்று அப்பர் பாடி மகிழ்கிறார். இத்தகைய அன்னைதான் மனையறத்தால் அறம் பெருக்கித் திறம் வளர்க்கிறாள். அகில உலகத்தில் உள்ள உயிர்களை எல்லாம் ஊட்டி வளர்க்கிறாள் என்றெல்லாம் கற்பனை பண்ண முடிந்திருக்கிறது கலைஞனுக்கு.

தமிழ்நாட்டில் பிரிசித்திப் பெற்ற அன்னை காமாக்ஷியை, மதுரை மீனாக்ஷியை, இல்லை இவர்களோடு ஒத்த பெருமையுடைய அகிலாண்டேஸ்வரியை, அபிராமியை எல்லாம்தான் நீங்கள் நேரில் சென்று கண்டு வணங்கியிருப்பீர்களே!

இவர்களை விடுத்து, பலருக்கு அறிமுகம் இல்லாத ஒரு அன்னையையே உங்கள் முன் நிறுத்துகின்றேன். தாராசுரம் கோயில் அன்னை அன்னபூரணி அமுத கலசத்தை ஏந்திக் கொண்டு நம்மை நோக்கி விரைந்தே வருகிறாள். நம் பசிப் பிணி நீக்க!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar