Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மணிக்கு ஒருமுறை ஒலிக்கும் மணி! அறம் வளர்க்கும் அன்னை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தேசத்தின் மீது பாசம் செலுத்துங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2016
03:11

*நாடு, மொழி, இனம், பொருளாதார நிலை இவற்றிற்கு தீங்கு நேரும் வகையில், எந்த சூழ்நிலையிலும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடாதீர்கள்.
*மனிதர்கள் அறைகளில் வசிப்பதைப்போல, கடவுளும் ஒவ்வொரு நாட்டையும் அறைகளாக கருதி அதில் வசிக்கிறார்.
*மக்கள் நல்லவர்களாக இருக்கும் நாடும் நல்லதாகவே இருக்கும்.
*உணவில் அளவிற்கதிகமாக இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு ஆகிய சுவைகளைச் சேர்க்காதீர்கள். உணவை அதிக சூடாகவும் உண்ணாதீர்கள்.
*அறிவின் உச்சக்கட்டம் அன்பு. கல்வியின் உச்சக்கட்டம் நல்ல பழக்க வழக்கங்கள்.
*மாணவர்களுக்கு நல்ல வழக்கங்களைக் கற்றுத்தருவதும், தகுதியானவராக மாற்றித் தருவதுமே கல்வி கற்பித்தலின் அடிப்படை நோக்கமாகும்.
*மனிதர்களுக்கு பதினாறில் இருந்து முப்பது வயது வரையில் உள்ள காலகட்டம் மிகவும் முக்கியமானது. இந்த வயதில் கடுமையாக உழைத்துப்போராடி, லட்சியத்தை அடைய வேண்டும்.
*மனிதர்கள் பக்தியின் ஒரு அங்கமாகத்தான் இருக்க வேண்டும்.
*எந்த செயலையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுத்துங்கள்.
*உங்களிடம் இருக்கும் செல்வத்தை வைத்து, பொழுதுபோக்குகளில் காலத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை. அந்த செல்வத்தால் பிறருக்கு சேவை செய்யுங்கள்.
*அதிகம் சாப்பிடுவது மந்த புத்தியையே தரும். ஆகவே உணவில் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
*கடவுள் ஒருவரே. அவரே இந்த வாழ்க்கையைக் கொடுத்தவர். அவரே வாழ்க்கையின் பாதுகாவலராகவும், லட்சியமாகவும் இருக்கிறார்.
*உங்களது பக்திப்பூர்வமான செயல்பாடுகள் பழத்தின் தோலுரித்து, உள்ளிருப்பதை எடுத்து சாப்பிடுவதைப்போல, பயனுள்ளதாக இருக்க வேண்டும்.  
*நான் பயமில்லாதவன், நானே கடவுள் என்று சொல்லிக்கொண்டே இருங்கள். நிச்சயம் நீங்கள் யாராலும் வெல்ல முடியாதவராக வலிமை பெறுவீர்கள்.
*நிகழ்காலத்தில் நடப்பவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு தொடர்புடன் நடந்து கொண்டிருக்கிறது.
*குழந்தைகள் தவறு செய்யும்போது மிகவும் கண்டிப்பு காட்டுங்கள். அவர்களே நற்செயல் செய்யும்போது, வாய்விட்டு புகழ்ந்து பேசுங்கள். அதுவே அவர்கள் எதிர்காலத்தில் நல்ல பாதையில் செல்லும் வழிகாட்டியாக அமையும்.      
*லட்சியத்தை அடையும் வரையில் துவண்டு போவதும், அதிலிருந்து பின் வாங்குதலும் கூடாது.
*விண்வெளிக்குச் சென்று, நிலவிலும் கால் வைத்து விட்டவர்களுக்கு, பக்கத்து வீட்டினருடன் இணக்கமாக இருக்கத் தெரிவதில்லை.
*கடவுளை அடைவதையே, உங்களது லட்சியமாகக் கொண்டு வாழுங்கள்.
*கடவுளை வெறுமனே விளக்கேற்றி வழிபடுவதைவிட, இருதயத்தில் விளக்கேற்றி வழிபடுவதுதான் சிறந்தது.
*உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வரைமுறை வைத்துக்கொள்வது, தவறான செயல். இவ்வாறு செய்வது கடவுளை அவமரியாதை செய்வதற்குச் சமம்.     
*சாப்பிடும் உணவு, அதற்கான வகைகளை வாங்கியவர், சமைத்தவர் மற்றும் பரிமாறியவர் ஆகியோரின் மனநிலையைப் பொறுத்தே இருக்கும்.
*பிறரது பார்வைக்கும், உங்களது பார்வைக்கும் வித்தியாசம் இருக்கட்டும். அதை
உங்களுக்கான தனிப்பட்ட அடையாளமாகவும் மாற்றிக் கொள்ளுங்கள்.
*பறவைகள் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், உணவிற்காக தரையிறங்கத்தான் வேண்டும்.
*விழிப்புணர்வை மனதில் உறுதியாக பிடித்துக் கொண்டவர்களுக்கு நிலையான பாதுகாப்பு நிச்சயம் இருக்கும்.
*உணர்வுகளைக் கட்டுப்படுத்தி செயல்பட்டால் மட்டுமே, மனிதன் மேன்மையான நிலையைப் பெற முடியும்.
*மனிதர்களுக்கு இறப்பு எந்த நேரத்தில் வரும் என்பது யாருக்கும் தெரியாது. அந்த நேரத்தை, நிச்சயமாக கடவுள் முன்னறிவிப்பு செய்வதில்லை.

(மகான் சாய் பாபா)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar