பதிவு செய்த நாள்
22
நவ
2016
10:11
தஞ்சாவூர்: கும்ப கோணம் அடுத்த, அம்மா சத்திரம் கால பைரவர் கோவிலில், சதுர்கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பெருவிழா, நேற்று நடை பெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணம் அடுத்த அம்மா சத்திரத்தில், ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கால பைரவர் , சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குவதால், காசிக்கு நிகராகக் கருதப்படுகிறது. இந்த கோவிலில், கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி விழா நேற்று நடந்தது. பைரவருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பழங்கள் உள்ளிட்ட, 23 பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ருத்ராபிஷேகம் நடைபெற்றது.வெகு விமரிசையாக நடைபெற்ற விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.