பதிவு செய்த நாள்
22
நவ
2016
02:11
விழுப்புரம்: விழுப்புரம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., சார்பில், சிறப்பு பூஜைகள் செய்தனர். முதல்வர் ஜெ., தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, கோலியனுார் வாலீஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. அமைச்சர் சண்முகம் தலைமையில், சிறப்பு ஆயுஷ் ேஹாமம் மற்றும் மிர்திஞ்ச ேஹாமம் செய்தனர். கோலியனுார் ஒன்றிய செயலாளர் முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் சேர்மன்கள் விஜயா சுரேஷ்பாபு, முருகவேல், குப்புசாமி, வளவனுார் நகர செயலாளர் சங்கரலிங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிரேமா முருகன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், துணை செயலாளர்கள் சீத்தா கலியபெருமாள், பவானி தமிழ்மணி, இணை செயலாளர் கவிதா செந்தில்குமார், ஆனாங்கூர் கூட்டுறவு சங்க தலைவர் மணி, இலக்கிய அணி செயலாளர் கலியமூர்த்தி, பொறியாளர் ரமேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பார்த்தசாரதி, ரவீச்சந்திரன், வித்யாபாலு, முனுசாமி, செந்தில்குமார், ராமசாமி, ஏகாம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.