பதிவு செய்த நாள்
23
நவ
2016
12:11
ஆர்.கே.பேட்டை: சமத்துவபுரம், பவானியம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்க்கிழமையை ஒட்டி, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, சமத்துவபுரம் பகுதியில், பெரியபாளையத்து பவானியம்மன் கோவில் உள்ளது. இங்கு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வந்து, அம்மனை வழிபட்டு செல்கின்றனர். நேற்று, செவ்வாய்க்கிழமையை ஒட்டி, காலை, 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பெண்கள் எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். மாலையில், சிறப்பு மலரலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.