பதிவு செய்த நாள்
23
நவ
2016
12:11
திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுஇருந்த வீட்டை, அறநிலைய துறையினர் அதிரடியாக அகற்றினர். திருப்போரூர், கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமாக, 650 ஏக்கர் விவசாய நிலங்கள், குடியிருப்பு மற்றும் வாடகை கட்டடங்கள் உள்ளன. அவ்வப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் நிலையில், நேற்று, திருப்போரூர் நெம்மேலி சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடியிருப்பு கட்டடத்தை, திருப்போரூர் போலீசார் உதவியுடன், கந்தசுவாமி கோவில் நிர்வாகம் அதிரடியாக அகற்றியது. இதன் மதிப்பு, ஏழு லட்சம் ரூபாய் என, கூறப்படுகிறது.