Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னபூர்ணே.. சதாபூர்ணே! அஷ்டதிக் பாலகர்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அர்ச்சுனன் அஸ்திரம் பெற்ற நாள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2016
03:11

பங்குனி உத்திர நாள், தெய்வத் திருமணங்கள் பல நடந்த அற்புதத் திருநாள், பரமனிடம் அர்ச்சுனன் பாசுபதம் பெற்ற நாளும் இதுவே என்கிறது புராணம். இந்த நிகழ்வு திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்குற்றாலம் திருத்தலத்தில் நடந்தது என்பது வரலாறு. நடராஜப் பெருமானின் பஞ்ச சபைகளில் சித்திரசபை குற்றாலத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் குற்றாலநாதர் லிங்கரூபமாக அருள்புரிகிறார். இத்தலம் திரிகூடமலை, மும்மூர்த்தி மலை, வேடன் வலம்வந்த ஊர், குறும்பலா, திருநகர், மும்மூர்த்திபுரம், தென்றல், பேரூர், சக்தி பீடபுரம், ஞானபுரி, முதுகங்கைபுரம், தேவகூடபுரம், பிதுர்கண்டபுரம் என்று பல பெயர்களைக் கொண்டது. சக்தி பீடங்களில் சற்று வித்தியாசமாகத் திகழும் திருத்தலம் என்றும் போற்றுவர்.

கோயில் வெளிப்பிராகாரத்தில் வடக்குதிசையில் ஞானசக்தியாக அருள்புரிகிறாள். அம்பாள் பிற இடங்களில் பீடத்தில் சக்தி இருக்கும். குற்றாலத்தில் பீடமே சக்தியாகத் திகழ்கிறது. இத்தலம் ஆதியில் பெருமாள் கோயிலாக இருந்ததாகச் சொல்வர். ஒரு சமயம் அகத்தியர் இங்கே வந்தபோது, சிவனடியார்போல் காட்சி தந்த அவரை உள்ளேவிட அர்ச்சகர்கள் மறுத்தனர். சிவன் பெரியவரா? பெருமாள் பெரியவரா? என்று விவாதம் நடந்து கொண்டிருந்த காலம், அங்கிருந்து திரும்பிய அகத்தியர், அருகிலுள்ள நீர்வீழ்ச்சியில் நீராடினார். கையோடு கொண்டுவந்த கமண்டலத்தையும் தண்டத்தையும் ஒரு புதரில் மறைத்து வைத்தார். மலைமீது சிறிது தூரம் சென்றார். மூலிகைகள் சிலவற்றை மந்திரம் ஜெபித்துப் பறித்தார். சிவச்சின்னங்கள் களைந்து திருநாமம் இட்டுக்கொண்டார். துளசி மாலையுடன் கோயிலுக்கு வந்தார். வைணவப் பெரியவர்போல் காட்சிதந்த அகத்தியரை யாரும் தடைசெய்யவில்லை. கருவறையருகே இருந்த அர்ச்சகர் வரவேற்று, அவரையே பூஜை செய்ய அனுமதித்தார்.

தகுந்த பூஜைப்பொருட்கள் கொண்டுவரவில்லை என்று சொன்ன அகத்தியர் அவற்றை எடுத்துவருமாறு அர்ச்சகரிடம் சொல்லவே அவர் அங்கிருந்து வெளியேறினார். கோயில் கருவறைக்குள் அகத்தியர் நுழைந்தார். பகவானே, கேட்டதைக் கொடுக்கும் தயாபரியே, நான் வேண்டுவதை அருளவேண்டும் பரம்பொருளே என்று பெருமாளை துதித்து வணங்கினார். அகத்தியர் எதற்காக வந்திருக்கிறார் என்பதை அறிந்த பெருமாள் அவருக்கு அருள்புரியதிருவுளம் கொண்டார். அகத்தியர் தன்னிடமிருந்த மூலிகைச் செடிகளை கசக்கினார். பெருமாள் சிரசின்மீது மூலிகைச் சாற்றினை அபிஷேகித்து குறுகுக.... குறுகுக என்று வேண்டினார். அகத்தியர் விருப்பப்படி பெருமாள் குறுகினார். சில நிமிடங்களிலேயே பெருமாள் குறுகியதைக் கண்டு மகிழ்ந்த அகத்தியர், சிவலிங்க வடிவமாக்க கைவைத்து அழுத்தம் கொடுத்தார். அகத்தியரின் விரல்களால் ஏற்பட்ட அடையாளம் சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் இன்றும் உள்ளது இதை அபிஷேகத்தின்போது தரிசிக்கலாம்.

அகத்தியர் கைகளால் அழுத்திய காரணத்தால், இறைவனுக்கு தலைவலி இருக்கும் என்று அரிய மூலிகைச்சாறு மற்றும் வாசனைத்திரவியங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட தைலத்தை தினமும் அபிஷேகிப்பார்கள். அபிஷேகத்திற்குப்பின் அந்தத் தைலத்தைப் பிரசாதமாக வழங்குவர்.

இத்திருத்தலத்தில் இறைவன், அர்ச்சுனனுக்கு காட்சிதந்தார். சிவபெருமானிடம் பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக அர்ச்சுனன் அருந்தவம் செய்தான். அவன் தவத்தைக் கலைக்க மூகன் என்ற அசுரனை அனுப்பினான் துரியோதனன். அர்ச்சுனனின் கடும் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் வேடனாக வந்து அந்த மூகனைக் கொன்றார். இந்தக் கலவரத்தால் அர்ச்சுனன் தவம் கலைந்தது. அதற்காக வேடனிடம் வாதிட்டான். அவன் வாதிட்டுக்கொண்டிருக்கும்போதே அங்கிருந்த வேடன் மறைந்து விடவே, வந்தது இறைவனே என்பதை அறிந்து கைகூப்பி வணங்கி மீண்டும் தரிசனம் தந்து அருளவேண்டுமென்று வேண்டினான். இறைவனை தொழுவதற்காக முன்கூட்டியே பூஜைப் பெட்டியைக் கொண்டுவந்திருந்த அர்ச்சுனன், பெட்டியை வைத்த இடத்திற்குச் சென்றான். அங்கே பூஜைப்பெட்டி இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவன் உயிரைவிடத் துணிந்தான். அதற்குமேலும் சோதிக்க விரும்பாத இறைவன், திரிகூடமலைக்குச் சென்று பூஜைப் பெட்டியை பெற்றுக்கொள் என்று திருவாக்கு அருளினார். பாசுபதாஸ்திரத்தையும் கொடுத்து அர்ச்சுனனை ஆசீர்வதித்தார் என்கிறது புராண வரலாறு.

அர்ச்சுனன் பாசுபதம் பெற்று, பூஜைப்பெட்டியையும் பெற்று இறைவனிடம் ஆசிபெற்ற நாள் பங்குனி உத்திரத் திருநாளாகும். அந்நாளில் இத்திருக்கோயில் விழாக்கோலம் காணும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar