பதிவு செய்த நாள்
23
நவ
2016
03:11
அக்னி: விசுவாநரன் புத்திரன், தவத்தால் திக் பாலகனானான், பிரசாபதிக்கு சாண்டிலியிடம் பிறந்தவன். இவன் மனைவி சுவாகா தேவி. இவனுக்க இரண்டு முகம், நீண்ட ஏழு நாக்குகள், நான்கு கொம்புகள், மூன்று பாதங்கள், இவை பட்டினம் தென்கிழக்கிலுள்ள தேஜோவதி, இவனின் வாகனம் ஆடு. இவனுக்குக் குமரன் என்ற பெயருள்ள புத்திரன் உண்டு.
அமிர்தம் கமக்க அஞ்சி தீர்த்தத்திற்குள் ஒளிந்த காலத்து, தேவர்கள் தேடினர். அப்போது மீன்கள் சேர்ந்து இவனைக் காட்டிக் கொடுத்தமையல், அக்னி, அம் மீன்களைத் தூண்டிலில் அகப்பட சபித்து, பின் தவஞ்செய்து அமிர்தம் சுமக்க வலிமை பெற்றவன், இம்மீன்களுக்குத் தேவர்கள் இமையாவிழி அளித்தனர்.
இவன் தந்தையாகிய விசுவாநரன்தவம் செய்திட சிவமூர்த்தி தரிசனம் தரிசனம் தந்து உனக்கு என்ன வரம் வேண்டும்? என்ன வரம் வேண்டும்? என்று கேட்க, உம்மைப்போல் புத்திரன் வேண்டும் என்றான். அதனால் அக்னி இவனிடம் பிறந்து வளர்கையில் நாரதமா முனிவர் வந்து, உனது குமரன் பன்னிரண்டாம் வயதில் இடி வெட்டி விழுந்து இறப்பான் என்றார்.
இதைக் கேட்ட தந்தை விசன முற்று மகனிடம் சொல்ல, அக்னி சிவமூர்த்தியை எண்ணித் தவம் செய்தனன். சிவமூர்த்தி இவனது உண்மை நிலை அறிந்திட, இந்திரனைப் போல் தரிசனம் தந்து என்ன வேண்டும்? என வினவ, உன்னிடம் யாதும் விரும்பேன் என்று பசுரக் கேட்டதும், கோபித்தவர் போல் நடித்து, வச்சிராயுதத்தை நோக்கினார். அது கண்டு குமரனாகிய அக்னி பயப்பட, பின் தன் நிஜ உருவைக்காட்டி, உனக்கு யமபுரிக்கும் தெய்வ உலகிற்கும் நடுவிலுள்ள இடத்தைப் பதமளித்தோமென்று, முதுகைத் தடவி மறைந்தார். இது காசி காண்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சுவேதகி யகத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நெய்யை ஸ்வாஹா செய்து உண்டதால், மந்த நோய் கொண்டு, அர்ச்சுனனிடம் அந்த நோய் தீர்த்துக் கொள்ள வேண்டி, காண்டவ வனத்தைத் தீக்கரையால் தகித்துக் கொண்டவன்.
காண்டவ வனத்தில் தட்சகனுடைய குமாரனாகிய அசுவசேனனைத் தீக்கிரையாக்காமல் விட்டு விட்டபடியல், கண்ணபிரானால் நிலையில்லாதவனாகிடும்படிச் சபிக்கப்பட்டவன்.
அவுருவ மகரிஷியின் மனைவியின் தொடையில் நெடுநாள் மறைந்திருந்தவன்.
வசிட்டரால் பூமியில், சிகண்டி வயிற்றில் பாவகன், பவமானன், சுசி என மூவர் உருவாய்ப் பிறந்தவன்.
சிபி சக்கரவர்த்தியின் சத்தியத்தை அறிந்திடப் புறாவாகச் சென்றவன்.
தன் அம்சத்தால் சூரிய வம்சத்தில் உபகுப்தனெனப் பிறந்தான்.
ஒரு காலத்தில் நிகும்பனுடன் யுத்தம் செய்து தோற்றவன்.
இராமபிரான் இராவண யுத்தத்தில் நீலன் என்னும் வானர உருக்கொண்டு நீலனுக்கு துணை தான் அக்னியில் குளிக்க, அவனது கற்பின் தீயால் சுருக்குண்டு, சீதா பிராட்டியைத் தாங்கி இராமனிடம் முறையிட்டு, உண்மையாகிய பிராட்டியை ஏற்பித்தவன்.
அக்னி சிவ வீரியத்தைத் தாங்க முடியாது பூமியில் விட, அது பொன்னாகியது. அதற்கு ஹிரண்யம் என்று பெயர். அதனை வேதியர்கள் தானப் பொருளாக அடைந்தனர்.
கலி பிறந்த பின் பாண்டவர்கள் தங்கள் நாடுகளை விட்டு தவசிகளாய் செல்லுகையில், அர்ச்சுனன் தனது காண்டீபத்தை எடுத்துக் கொண்டு செல்வதறிந்து, அக்னி அவன் முன் தோன்றி காண்டீபத்தை அவனிடமிருந்து வாங்கி ஒடித்துக் கடலில் எறிந்தான்.
தேவர்களின் வேண்டுகோளால் குமரக்கடவுளின் தேரில் கோழிக் கொடியானவன் அக்னியாகும்.
சிவபெருமானின் முக்கண்ணில் பிறந்த தீப்பொறி களைத்தாங்கிச் சென்று கங்கையில் விட்டவன். இவன் சகல பட்சகனானது சீதாதேவி கொடுத்த சாபம் ஆகும்.
மகரிஷிகள் இவ்வக்னி ஜ்வாலையானது, சூரிய சந்திரர்களிடம் சோதியாகவும், மேகத்திடை மின்னலாகவும் பூமியில் தீயாகவும், கடலில் வடவையாகவும், மக்களிடத்தில் ஜடாக்னியாகவும் இருக்கும் என்பர். இவ்வக்னி மண்டலவாசிகள் அநலர் முதலிய நாற்பத்தொன்பதின்பர் ஆவார்கள். இவருள் தலைமை பெற்றவன் அபிமானாக்னி எனப்படுவான்.
குபேரன்
நவநிதிகளின் தலைவன். விசிரிவஸு முனிவர்க்கு இளிபிளியிடம் உதித்தவன். இது பதுமகர்ப்பத்தில்.
தன்னை வெருட்டிய சுக்கிரன் கர்வபங்கப்பட சிவ மூர்த்தியை வேண்டி நின்றவன்.
பத்ம கர்ப்பத்தில் தந்தை சொல்லால் இலங்கையை இராவணனுக்குக் கொடுத்து, அளகாபுரியை ஆண்டவன்.
இராவணனுக்கு, நான் கடும் தபத்தினால் சிவபெருமானுக்கு நெருங்கிய தோழனானேன். ஆதலால் தேவர்கள் வருத்தலாகாது என தூதுவனிடத்தில் சொல்லி அனுப்பியும் அந்தத் தூதுவனைக் கொலை செய்தால் வருத்தமடைந்தவன்.
அட்டவக்கிரனுக்கு உபசாரம் செய்து பலநாள் விருந்தளித்தவன்.
இலக்குமி தேவிக்கு வைச யந்தம் கொடுத்தவன் இவன் தேவி சித்ரரேகை என்பாள். இவள் வாகனம் அச்வமாகும். மேலும் கிளி, நான் என்பாரும் உண்டு. ஆயுதம் கடகம் உடையவன். சீரக்கத்தார் மாலை அணிந்தவன். இவனது புத்திரன் நளகூபுரன், புஷ்பக விமானம் உடையவன்.
பொன் கண்ணை உயைடவனாகவும், அனகாபுரிக்கு அரசனாகவும், அரனிடம் தோழமையும் பெற்றவன் இவன். விஞ்ஞையர், கின்னரர் இவர்களுக்கு அரசன், வடதிசைக்கு உரியவன் வடக்கு குபேர மூலை எனப்படும்.
பூம்புகார் நகரத்தில் மையல் கொண்டதால் சிவபெருமான் இவனது அம்சத்தைப் பட்டினத்தாராகப் பிறக்கச் செய்தார்.
வருணன்:
கர்த்தம பிரஜாபதிக்குத் தூம்ரையிடம் சுசிட்டுமான என்னும் குமாரன் பிறந்தான். இவள் சில குமாரர்களுடன் கங்கை நதியில் நீராடச்செல்ல, அவ்வமயம் ஒரு முதலை அவனை விழுங்கிற்று, இச் செய்தியை உடன் சென்ற குமாரர்கள் யோக நிஷ்டையிலிருந்து இவன் தந்தைக்கு உணர்த்தினார். தந்தை யோகக் காட்சியில் நடப்பதைக் கண்டுகொண்டார். சுசிட்டுமானை விழுங்கிய முதலையைக் கங்கை கடலில் சேர்த்தனன். அப்போது ஒரு கணநாதன் சமுத்திரராஜனுக்கு முன்தோன்றி, இவன் கர்த்தம பிரஜாதிபதியுடைய புத்திரன் எனக் கூறவும். சமுத்திரராஜன் வருணன் என்று பெயர் சூட்டி, முதலை மீதே ஏற்றி, அவன் தந்தையிடம் விட்டு வரச் செய்தான்.
குமாரன் வந்து தந்தையை வணங்கி ஆசிபெற்றுப் பின், சிவ மூர்த்தியை எண்ணித்தவம் புரிந்து வரம் அடைந்தான். அவன் தவத்தை மெச்சி. சிவபெருமான் வருண உலகமும், தண்ணீருக்கு இறைமையையும் பெற்றனன். இந்த உலகத்தைக் குளம் கிணறு, கால்வாய், தண்ணீர்ப் பந்தல் முதலியன வைத்தவர்களும், செய்தவர்களும் இவனருள் அடைவர்.
இவனுக்கு குரு துரோகத்தால் பிரம்மஹத்தி ஏற்பட, அதனால் கடலில் விழுந்து பாவம் நீங்கினான்.
மதுரையின் மேல் இந்திரன் ஏவலால் வந்து, உக்கிர பாண்டியனால் வீறு அடங்கச் சென்றவன்.
இரிசிகளுக்கு ஒரு காது பசுமை நிறம் உள்ள ஆயிரம் குதிரைகளைக் கொடுத்தவன்.
அரிச்சந்திரனுக்குப் புத்திரப்பேறு, உதவி, புருஷ அவிக விரும்பினவன்.
நந்தகோபர் யமுனை நதியிடில் நீராடுகையில், கவரப்பட்டு இவ்வுலகம் அடைய, அவரை மீட்கும்படி வந்து ஸ்ரீகண்ணபிரச்னைக் கண்டு உபசரித்து அருள்பெற்றவன்.
பிரபாச தீர்தத்தில் ஸ்ரீகண்ணனுக்கு சாந்தீபினி குமாரன் இறந்த செய்தியைக் கூறினவன்.
இவன் மேற்குத் திசைக்கு இறைவன், இவனது பட்டணம் விபாவரி அல்லது சிரத்தாவதி என்பதாகும். இவனது ஆயுதம் பாசமாகும். இவனது வாகனம் முதலையாகும்.
ஒரு முறை இராவணனிடம் தோற்று. தன் பாசத்தை இழந்தவன்.
இராமபிரான் இவனைத் துதித்தும் வராமையால் பாணம் ஏவ, அதனால் எரிந்து, பின் வந்து காரணம் கூறி, அபயம் கேட்டனன். பிரஹஸ்பதியின் மனைவியைக் கவர்ந்ததனால், அவர் சமுத்திர ஜலத்தை எல்லாம் வற்றச் செய்ய, பின் வணங்கி மீண்டு அவளைக் கொடுத்தவன்.
தன் வயிற்று வலி தீர மதுரையின் மீது கடலை ஏவினவன்.
பாண்டியன் வேண்டலால் சிவமூர்த்தி சடையிலிருந்த மேகங்களை ஏவி, நீரை வற்ற செய்தனர். இதனால் வெட்கி சிவபூஜை செய்து வயிற்றுவலி போக்கிக் கொண்டவன்.
வாயு:
காசியபர் குமாரர்களில் ஒருவர் பலநாள் தவம் செய்து வாயு பதம் பெற்றவன். வடமேற்கு திசைக்கு அதிபதி. இவனது தேவி அஞ்சனை, இவனது வாகனம் மான். இவனது குமாரன் ஆஞ்சனேயன், இவனது பட்டணம் கந்தவதி இவனது ஆயுதம் துவசம்.
ஸ்ரீகிருஷ்ணனின் ஏவலால் இந்திரனிடமிருந்து சுதர்மையைப் பெற்று, உக்கிர சேனலுக்குக் கொடுத்தான். தேவர்கள் வேண்டுகோளால் குமரக்கடவுளின் இரத்தத்திற்குச் சாரதியாக இருந்தவன். அனுமனுக்கு நீ யாரை முதலில் காண்கிறாயோ அவரிடத்தில் உனது அதிக அன்பு மேலிடுமேயானால், அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய் எனக்கட்டளையிட்டவன்.
அதிகாயன் யுத்தத்திடில் இலக்குமணனுக்கு முன்னின்று பிரம்மாஸ்திரம் பிரயோகிக்க ஏவினவன்.
அனுமனை இந்திரன் வச்சிராயுதத்தால் மோதிய காலத்து, கோபித்து எல்லா உயிர்களிடத்தும் உள்ள தன் இயக்கத்தை கடலில் சேர்த்தவன்.
சிவாக்கினியால் சிவமூர்த்தியின் நெற்றிவழியில் தோன்றிய ஆறு தீப்பொறிகளைத் தாங்கிச் சென்று கங்கையில் சேர்த்தவன்.
இந்திரனுக்குப் பயந்து மைனாகப் பர்வதத்தைக் கடலில் சேர்த்தவன்.
ஆதிசேடனிடம் வேறுபாடு கொண்டு, மேருவின் சிகரத்தைப் பெயர்த்து எடுத்தவன். உடலில் எவ்வாறெல்லாம் வாயு இருந்து இயங்குகிறது என்பதைப் பார்ப்போம்.
பிராணன் இதயத்திலும், அபானன் குதத்திலும், சமானன் கழுத்திலும், உதானன் நாபியிலும், விபானன் தேகத்திலும், நாகன் நீட்டல் முடக்கல் செய்ததிலும் கூர்மன் உரோமப் புளகாங்கிதத்திலும் கிருகரன் முகத்தினின்று வரும் தும்மல், சினம், வெம்மை விளைவித்தலினும், தனஞ்சயன் உயிர் நீங்கினும் போகாமல் உடலைப் பற்றி இருக்கும். உயிர் நீங்கிய பொழுது உடலைக் கிழித்தலும் இவனது செய்கை, உடலில் பத்துவித வாயுக்கள் உள்ள தென்பர். மதங்க முனிவர் சாபத்தால் பலமற்று, பின் திரயம்புக புகக்ஷேத்திரத்தில் சிவபூஜை செய்து குற்றம் நீங்கினன்.
வாயு ரூபமின்றி பரிசமுடையது இது. த்வக், இந்த்ரீயம், பிரமாணம், பரிசம், சங்கியை, பரிமரணம், பிரதத்துவம், அபரத்வம், வேகம் முதலிய ஒன்பது குணங்கள் உடையது.
ஈசானன்: படிக நிறம் உடையவன், மூன்று கண்ணுடையவராய் சவுமியராய் புருஷாகாரமாய், சூலம், அபயம் தாங்கியவராய் இருப்பார். திக்பாலர்களில் ஒருவர். வடகிழக்கு இவருக்கு உரியது. சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றானவர்.
நிருதி: இவன் பூர்வ ஜென்மத்தில் பிங்கலாக்ஷன் என்னும் வேடனாயிருந்தான். இவன் வேடனாயிருந்தும் தீமையைச் செய்யும் வேடர்களை அடக்கி ஆண்டான். இவ்வகையில் ஒழுகி வரும் நாட்களில், புண்ணியத்தால் யாத்திரை செய்வோரைச் சில வேடர்கள் மறித்துத் துன்புறுத்த, அவ்வேடர்கள் பல பேருடன் இவன் போரிடுகையில் இறந்து போனான். ஆயதினால் நிருதியானவன். இவன் தவத்தால் தென்மேற்குத் திசைக்குக் கடவுளாயினான். இவனது தேவி தீர்க்கா தேவி. இவனது பட்டணம் கிருஷ்ணாங்கனை. இவனது வாகனம் பூதம். இவனது ஆயுதம் குந்தம் என்பதாகும். இவனது உலகத்தை இழிந்தவராயினும் நன்மை செய்தவர்கள் அடைவார்கள். இவனது வாகனமாகிய பூதம் பராசர முனிவர் வேள்வியால் இழுக்கப்பட, சிவபெருமானை எண்ணி, அது முறையிட, சிவபெருமான் வேள்வியை நிறுத்தக் கட்டளையிட்டதால், அந்தப் பூதம் உயிர்பெற்றது. இது காசிக் காண்டத்தில் உள்ளது. முதல் வள்ளல் எழுவரில் நிருதியும் ஒருவன். இராமன் என்னும் மனு புத்திரனுக்கு மனைவியாகத் தோன்றியவன்.
யமன்: விச்வாகவரனுக்கு (சூரியன்) சாயா தேவியிடம் (சமுக்கை) பிறந்த குமாரன். இவன் இறைவன் ஆணையால் உயிர்களை அவர்கள் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஈடாகக் கால முடிவில் சுவர்க்க நகரங்களில் செலுத்தும் காலக் கடவுள், இவனது பட்டணம் சையமணி. வாகனம் எருமைக்கடா. ஆயுதங்கள் - தண்டம், பாசம், குடாரம், சுரிகை, தேவியானவள் சமானை அல்லது கன்னி, தூதர்கள் ஔதும்பரன், சண்டமிருகன், சம்பரன், சார்த்தூலன் முதலானோர்.
மார்க்கண்டன் பொருட்டு சிவமூர்த்தியால் தண்டிக்கப்பட்டவன். பிரமன் சொற்படி இராவண திக்விஜயத்தின்போது காலதண்டம் அவன்மேல் விடாதிருந்தவன். சாவித்திரியின் வேண்டுதலால் சத்தியவானை மீளச் செய்தவர். மாண்டு முனிவர் சாபத்தால் சூத்திரனாய்க் கோகர்ணத்தில் சிவ பூஜை செய்து, நிர்மலம் அடைந்தவன், இவனது திசை தெற்காகும்.