Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அஷ்டதிக் பாலகர்கள் அவதார புருஷரும் மனித உணர்வுகளும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அசுவத்தாமன் அந்தணருக்குத் தந்த ஈட்டி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2016
03:11

எல்லா வரலாற்று ஆசிரியர்களும் ஒரே மனதாக ஒத்துக்கொள்வது -நம் நாட்டவர் தம் ஆட்சியை விஸ்தரிக்க அங்கு செல்லவில்லை. வியாபார நோக்கத்துடன்தான் சென்றனர். முதலில் சென்ற வியாபாரிகளைத் தொடர்ந்து, கல்வித் தேர்ச்சிப் பெற்றிருந்த பிராமணர்களும் கலை வல்லுனர்களும் சென்றனர். போய் இறங்கியதும் அவர்கள் எல்லாருமே புத்திசாலித்தனமாக செய்த முதல் காரியம் அங்கு பேச்சு வழக்கிலிருந்த உள்ளூர் மொழியைக் கற்றது தான். புதிதாக வந்தவர்களின் வாழ்க்கை முறையால் கவரப்பட்ட உள்ளூர் மக்கள் அந்தப் புதிய கலாசாரத்தின் அம்சங்களை விரும்பி ஏற்றுக்கொண்டனர்.

இங்கிருந்து சென்றவர்களுக்கு அரச குடும்பத்தில் செல்வாக்கு ஏற்பட்டது. அந்த செல்வாக்கின் அடிப்படையில் திருமண பந்தங்கள் ஏற்பட்டன. தங்கள் மருத்துவத் திறமையால் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது. துன்பங்களிலிருந்து விடுபட ரக்ஷைகள், தாயத்துக்கள் செய்து கொடுப்பது என்று தொடர்புகள் அதிகரித்தன. இது தவிர அன்றாட மக்கள் வாழ்க்கையிலும் போர், கலை, நீதி நிர்வாகம் என்று பல துறைகளிலும் இவர்களின் அறிவுரைகள் விரும்பி வரவேற்கப்பட்டன. காலப்போக்கில் அந்த நாடுகள் இந்தியாவின் கலாசார காலனிகளாகவே மாறின.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாடுகளில் சமஸ்கிருதம் ஆட்சி மொழியாகவே விளங்கியது. செஸ், விளையாட்டு, கணிதம், மொழி, இலக்கணம் என்று எல்லாம் நம் நாட்டிலிருந்து அங்கு பயண மாயின. ஆன்மீகத் துறையிலும், உள்ளூர் மக்களை மேலும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்றதும் இந்தியர்களே. அனைத்துத் துறைகளிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்திய மயமானது.

இந்த நாடுகளில் அன்றாடப் பேச்சு வழக்கில் காணப்படும் சமஸ்கிருத சொற்கள் இந்திய எழுத்துக்கள் அடிப்படையில் அவர்கள் மொழியின் எழுத்துவடிவம், சட்டம், நீதி, நிதி, நிர்வாகம் இவைகள் யாவும் இந்திய சட்டதிட்டங்கள் அடிப்படையில் அமைந்திருப்பது, இன்றுகூட இஸ்லாம் இனத்தவர் வீடுகளில் பின்பற்றப்படும் சில பிராமண பழக்கவழக்கங்கள், சிற்பம் கட்டிடக் கலைகளில் மிகவும் வெளிப்படையாகத் தெரியும் இந்திய அம்சங்கள், இந்நாடுகள் எல்லாவற்றிலும் எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படும் சமஸ்கிருத கல்வெட்டுக்கள் இவை எல்லாமே இந்த உண்மையை திட்டவட்டமாக உறுதி செய்கிறது.

இந்தியாவிற்கும், கம்போடியாவிற்கும் வணிக, கலாசார தொடர்புகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உண்டு. ஏழாம் நூற்றாண்டிலிருந்து பதினாலாம் நூற்றாண்டு வரை கம்போடிய அரசர்களில் பல பேர் வர்மன் எனும் பட்டத்தைப் பெற்றிருந்தனர். (பல்லவ அரசர்கள் மகேந்திரவர்மன், நரஸிம்மவர்மன் மாதிரி) சிவனையும், பிள்ளையாரையும் வணங்கி வழிபட்டு வந்தனர்.

கிறிஸ்து பிறப்பதற்குச் சில வருடங்கள் முன்னரே இந்தியாவிலிருந்து கௌண்டின்யர் எனும் அந்தணர் கம்போடியா சென்று ஃபுனான் எனும் வளமிக்க தேசத்தை ஸ்தாபித்ததாகச் சொல்லப்படுகிறது. கவுண்டின்யர் அங்கு ஆட்சி செய்து வந்த நாகர்களின் அரசர் நாகராஜனின் மகளான நாகிஸோமா எனும் இளவரசியை மணந்தார்.

அவர் இந்தியாவிலிருந்து கிளம்பும்போது, போகும் இடத்தில் தன் குறிக்கோளில் வெற்றிபெற மஹாபாரத அச்வத்தாமன் மகிமை பொருந்திய ஈட்டி ஒன்றைக் கொடுத்து ஆசி வழங்கியதாக கம்போடியாவில் காணப்படும் கல்வெட்டு கூறுகிறது. அவருக்குப் பிறகு அந்தப் பரம்பரையைச் சேர்ந்த மன்னர்கள் ஆண்டனர்.

ஆனால் ஏனோ தெரியவில்லை. இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்தும், இவ்வரலாற்றுத் தொடர்புகள் பற்றி மேலும் விவரமாக, ஆழமாகத் தெரிந்து கொள்ள இருநாட்டு அரசுகளும் (இந்தியா, கம்போடியா) முயற்சி செய்யவில்லை.

கம்போடியர்களின் அன்றாட பழக்க வழக்கங்களில் பலவும் நம் இந்து மத பழக்கவழக்கங்கள் மாதிரியே இருக்கும். அவர்கள் எழுத்து வடிவமும் தமிழ் மொழியின் சாயலிலேயே இருக்கும் ஆட்சி மொழி சமஸ்கிருதம்.

சுமார் பத்தாயிரத்திற்கும் மேலான ராமாயண மஹாபாரதம் எழுதப்பட்டுள்ள உள்ளூர் ஓலைச் சுவடிகள் கிடைத்திருக்கிறது. ஆனால் அவற்றைப்படித்து, அது கூறும் விஷயங்கள் பற்றி எடுத்துச் சொல்லும் வல்லுனர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலேயே காஞ்சி, தன் அரசியல் மத கலாசார விழுதுகளை நம் நாட்டில் மட்டுமின்றி, கம்போடியா, இந்தோனேஷியா, ஸ்ரீலங்கா, வியாட்நாம், பர்மா, பிலிப்பைன்ஸ், சீனா என்று பல நாடுகளிலும் பரப்பியிருக்கிறது. அந்நாடுகளை எல்லாம் மனத்தளவில் இணைக்கும் மாபெரும் சக்தியாக திகழ்ந்திருக்கிறது. இந்நாடுகளுக்குச் செல்லும் டூரிஸ்டுகள் உன்னிப்பாகக் கவனிக்கும் பட்சத்தில் இதனை உணர முடியும். சம்பா தேசத்தின் தலைநகர் ஸிம்மபுரம். ஏகப்பட் சிவன்கோயில்கள், ராமாயணம் இயற்றிய வால்மீகி முனிவரின் கோயிலும் அங்கு உண்டு. ஆதிசங்கரரையும் காஞ்சிபுரத்தையும் குறிக்கிறது கல்வெட்டு ஒன்று.

பல்லவ அரசன் இரண்டாம் பரமேச்வரவர்மன் வாரிசு இல்லாமல் இறந்துபோனதும், காஞ்சி கடிகையைச் சேர்ந்த பண்டிதர்கள் காடுமலை எல்லாம் கடந்து பயணித்து கம்போடியாவிலிருந்து இளவரசரை அழைத்துவந்து இரண்டாம் நந்திவர்மனாக முடிசூட்டி இருக்கின்றனர். என்றால் அந்தத் தொடர்பின் ஆழத்தைப் புரிந்து கொள்ளலாம்.

தெற்கு சீனாவில் க்வாங்ஸான் மாவட்டத்தில் சமீபத்தில் மஹாவிஷ்ணுவின் 73-வித சிற்பங்கள், நரஸிம்மர், கிருஷ்ணர், ஹனுமான், மஹாலட்சுமி படிமங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே மிகப்பெரிய கோயில், மிகப்பெரிய விஷ்ணுகோயில் அங்கோர்வாட் கோயில். மஹா பாரத நிகழ்ச்சிகள், குருக்ஷேத்ர யுத்தம், கம்ஸவதம் போன்ற பலசம்பவங்கள் சிற்பங்களாக இங்கு இடம் பெற்றிருக்கின்றன. அங்கு தினம் வரும் ஆயிரக்கணக்கான டூரிஸ்டுகளில் எத்தனைப் பேருக்கு அதன் இந்தியத் தொடர்பு தெரிந்திருக்கும்?

கம்போடியாவில் பல கோயில்களில் ராமாயண ஓவியங்கள் தீட்டப்பட்டன. இந்தோனேஷிய கோயில்களிலும், ராமாயண பெயிண்டிங்குகள் உண்டு. ஜாவா, கம்போடியா, மலேயா, ஸயாம், தாய்லாந்து, இந்தோனேஷியா, பர்மா நாடுகளிலும் ராமன் கதை பிரபலம்தான். தாய்லாந்தின் அயுத்தயா எனும் ஊரின் மூலப் பெயர் அயோத்யா. பூணல், சங்கு மூலம் அபிஷேகம் செய்வது -ட்ரியெம்பாவை, ட்ரிபாவை (நமது திருவெம்பாவை, திருப்பாவை) உத்ஸவங்கள் எல்லாம் தாய்லாந்தில் இன்றுவரை நடைபெற்று வருகிறது.

அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லாமல் ஒரே மாலையில் தொடுக்கப்பட்ட மலர்களாய், கலாசாரப் பின்னணி மட்டும் கொண்ட இந்நாடுகள் அனைத்தும் அதே கலாசார அடிப்படையில் ஒன்று சேருமா? அகண்ட பாரதமான இந்தியாவை, அரசியல் அடிப்படையில் இல்லாமல் கலாசார அடிப்படையில் இந்தியாவின் தலைமை ஏற்று இவை ஒன்றாக இணைய முடியுமா? அரசியல் தலை காட்டாததால்தான்  இன்றுவரை அந்த மலர்ச்சி நீடித்து வருகிறது.

இந்தத் தொடர்புகள் அடிப்படையில், இந்த இடத்திலிருந்து நாம் செல்ல வேண்டிய அடுத்த கட்ட நிலை என்ன? நாம் என்னென்ன நடவடிக்கைள் எடுக்க வேண்டும்? இதுபற்றி உலக அளவில் அறிஞர்கள் விவாதித்து வருகின்றனர். எல்லாரும் வரவேற்கும் ஒரு கருத்து இந்து மகா சமுத்திரத்தை அடுத்துள்ள, இந்தியக் கலாசாரம் பரவியிருந்த நாடுகள் - தென் ஆப்பிரிக்கா முதல் டாஸ் மானியாவரை சுமார் 63,000 கி.மீ. கடற்கரை ஒட்டிய 59 நாடுகள் - இந்துமா கடலின் விளிம்பு நாடுகள் எனும் அமைப்பைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் ஆரம்பமாகி இருக்கின்றன. இதற்கு எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாது.

இப்படி மட்டும் ஒரு அமைப்பு ஏற்பட்டுவிட்டால் அதன் வீச்சு உலகநாடுகள் மீது எந்த அளவு இருக்கும் என்பதை ஒருவராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பாகவே அது விளங்கும். கலாசாரத்தால் ஒரு காலத்தில் ஒன்றிணைந்து இருந்த இந்த நாடுகள் கரம் கோர்த்தால் இந்தப் பூவுலகமே புண்ணிய பூமியாக மாறும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar