வேலுார்: வேலூர் அருகே, பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சீனிவாச பெருமாள் மூல விக்கிரகத்திற்கு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. வேலுார், ஸ்ரீபுரம் தங்கக் கோவிலுக்கு அருகில், சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிேஷகம், அடுத்த மாதம், 9ல் நடக்கிறது. இதையொட்டி, சீனிவாச பெருமாளின், ஒன்பது அடி உயர மூல விக்கிரகத்தை, 2,500 லிட்டர் பாலில் நிரப்பி, சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதில், தங்கக் கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.