பதிவு செய்த நாள்
25
நவ
2016
01:11
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில், பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. திருத்தணி அடுத்த, தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகைபகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 8:00 மணிக்கு, மூலவர் சாய்பாபாவிற்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு, சேஜ் ஆரத்தியும் நடந்தது. இதில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை மற்றும் அதைசுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.