அறிவிப்பாளர்: ஜரீர்பின் அப்துல்லாஹ்(ரலி) நாங்கள் நபி(ஸல்) அவர்களின் திருச்சமூகத்தில் ஒருநாள் காலை வேளையில் அமர்ந்திருந்தோம். அப்போது சிலர் வாள்களுடன், முரட்டுக் கம்பளியைப் போர்த்திக் கொண்டு வந்தார்கள். அவர்களது உடலின் பெரும்பகுதி நிர்வாணமாக இருந்தது. அவர்களுடைய வறுமை நிலை கண்டு நபிகளாரின் திருமுகம் வருத்தத்தால் வாடி விட்டது. பின்னர் அண்ணலார் வீட்டிற்குள் சென்றார்கள். பின்னர் வெளியே வந்தார்கள். பிலால்(ரலி) அவர்களிடம் பாங்கு சொல்லும்படிக் கட்டளையிட்டார்கள். (தொழுகை நேரம் வந்து விட்டிருந்தது) பிலால்(ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். பிறகு தக்பீர் (அல்லாஹு அக்பர் இறைவனே பெரியவன் என்று) கூறினார்கள். அண்ணலார் தொழ வைத்தார்கள். தொழுகைக்குப் பிறகு நிகழ்த்திய உரையில், 4வது அத்தியாயமான அந்நிஸாவின் முதல் வசனத்தையும், 59வது அத்தியாயமான அந்நிஸாவின் அல்ஹஷ்ருடைய 1820வது வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள். அதன் பின் கூறினார்கள். “மக்கள் இறைவழியில் தர்மம் செய்ய வேண்டும். பொற்காசுகளையும் வெள்ளிக்காசுகளையும், துணிமணிகளையும் வழங்க வேண்டும். கோதுமை ஒரு மரக்காலும், பேரீச்சம் பழம் ஒரு மரக்காலும் வழங்க வேண்டும். இறுதியில், “ஒருவரிடம் பேரீச்சம் பழத்தின் ஒரு பாதித்துண்டு இருந்தால், அதையாவது அவர் கொடுத்து விடட்டும்!” என்று கூறினார்கள். இந்த உரையைக் கேட்ட பின்னர் அன்ஸார்களில் ஒருவர், கை கொள்ளாத அளவுக்கிருந்த பெரிய பை ஒன்றை எடுத்து வந்தார். பின் மக்கள் ஒருவர் பின் ஒருவராக தர்மம் செய்ய ஆரம்பித்தார்கள். (அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)