நபிகள் நாயகம் சொல்லும் நல்ல அறிவுரைகளைக் கேளுங்கள்.
*இறைவனுக்கு இணையாக யாரையும் இணையாக்காதீர்கள். *பெற்றோருக்கு என்றும் பெருமதிப்பு கொடுங்கள். *அறிஞர்களின் தொடர்பால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும். *விருந்தினர்களை விருப்பத்துடன் உபசரியுங்கள். *சென்றதை நினைத்து மனம் வருந்தாதீர்கள். *இறந்தவர்களைப் பற்றி இழிவாகப் பேசாதீர்கள். *உடலை அலங்கரிப்பதிலும், உடை அணிவதிலும் மிதமான போக்கை கைக்கொள்ளுங்கள். *மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள்.