சென்னை - கூடுவாஞ்சேரியில், ரயில்நிலையத்தை ஒட்டி அமைந்திருக்கிறது மாமரத்து விநாயகர் கோயில். இந்தப் பிள்ளையார், மாமரத்தின் அடிபாகத்தில் தோன்றியவர். தற்போது கவசம் அணிவித்து வழிபட்டு வருகின்றனர். மூலமூர்த்தியும் மரத்தின் அடியில் உள்ளார். சங்கடஹரசதுர்த்தியன்று மாலையில் ஹோமங்களும், மற்ற விழாக்களும் சிறப்புற நடைபெறுகின்றன. இவர் கோயிலில் ஈஸ்வரர், அம்பாள், பதினெட்டு கை துர்கை, அனுமன், தேவியருடன் நவகிரகங்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம். தற்போது மகாமண்டபம், கோபுரங்கள் கட்ட ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. வேண்டியதை சடுதியில் நிறைவேற்றும் வரப்பிரசாதி என்கிறார்கள் ரயில் பயணிகளும், உள்ளூர் பக்தர்களும்.