Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மா குமதி! பிள்ளை சுமதி!! மாமரத்து பிள்ளையார்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யானை தந்தம் போல மதிப்பு மிக்கது எது தெரியுமா?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2016
04:11

*துன்பத்தில் நமக்கு கைகொடுத்த நல்லவர்களின்  உதவியை மறப்பது கூடாது. நன்றியுணர்வு என்பது யானைத் தந்தம் போல மதிப்பு மிக்கதாகும்.
*உண்மை மட்டுமே பேசி நேர்வழியில்  வாழ்வு நடத்த வேண்டும். பிறருக்கு நன்மை
செய்வதில் விருப்பம் கொள்ள வேண்டும்.
*உறுதியான மனம் படைத்தவனுக்கு துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் சக்தி இயல்பாகவே அமைந்திருக்கும். துறவு வாழ்விற்குத் தேவையான அடிப்படை குணம் இது.  
*இல்லறம் என்பது பிறர் நலம் பேணுவதாகும். இல்லறத்தில் இருந்து கொண்டு பிறருக்குச் செய்யும் சேவை பாராட்டக்கூடியதாகும்.
*வெளிப்பகட்டைக் கண்டு இந்த உலகம் மயங்குகிறது. வாசனைத் தைலம் பூசுவதை விட, மனத்துõய்மை மிகவும் போற்றுவதற்குஉரியது.
*பிறப்பால் யாரிடமும் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது. குணத்தைக் கொண்டே மனிதனை மதிப்பிட வேண்டும்.
*தலை சிறந்த தர்மம் என்பது பிற உயிர்களின் பசியைப் போக்குவதாகும். செய்த தர்மத்தின் பயனால், இப்பிறவி மட்டுமில்லாமல் மறுபிறவியிலும் தீங்கில்லாத நல்வாழ்வு அமையும்.
*வாய்மையின் வலிமையால் மனிதன் பிறவிக்கடலில் இருந்து காப்பாற்றப்படுவான். வாய்மை சந்திர மண்டலத்தைக் காட்டிலும் சுத்தமானது. சூரிய மண்டலத்தைக் காட்டிலும் ஒளி மிக்கது.
*பேராசை உள்ளவனுக்கு இந்த உலகம் முழுவதையும் அளித்தாலும் திருப்தி
உண்டாகாது. தேவைக்கு மேல் பொருள் கிடைத்தால் அது தீயஇயல்புகளை உண்டாக்கும்.
*பொய் பேசுபவன் அடிக்கடி  கோபத்திற்கு ஆளாவான். மனத்துõய்மை, பணிவு, பண்பு, புகழ் எல்லா நற்குணங்களும் பொய்யால் மறையும். பொய் பேசுபவனைச்
சார்ந்தவர்களுக்கும் தீமை உண்டாக்கும்.
*கூட்டு உழைப்பால் கிடைத்த பொருளை கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இல்லாவிட்டால் மறுபிறவியில் நற்கதி உண்டாகாது.
*கசப்பான மருந்து நோய் போக்கி நலம் சேர்ப்பது போல, நல்ல நண்பர்களின் கசப்பு மொழிகளும் கஷ்டத்தைப் போக்கி நன்மை தரும்.
*மவுனமாகத் தியானித்தால் மனம் அமைதி பெறும். எண்ணம் சுத்தமாகும். இதன் மூலம் பிறவி என்னும் துன்பக் கடலை எளிதாக கடக்க முடியும்.
*நல்ல நம்பிக்கை இன்றி நல்லறிவு உண்டாகாது. விவேகம் என்னும் நல்ல அறிவின்றி ஒழுக்கம் உண்டாகாது. ஆனால் யாருக்கும் நல்லறிவு சுலபமாக வருவதில்லை.             
*பேராசை, கோபம், பயம், விளையாட்டுப்புத்தி ஆகிய காரணங்களால்  மனிதன் தவறான செயல்களில் ஈடுபடுகிறான்.
*செய்த தவறை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்வதில் தயக்கம் கூடாது. இதில்
பிடிவாதமோ, போலி கவுரவம் கொள்ளவோ தேவையில்லை.
*கணநேரம் கூட வீண்பொழுது போக்குவது கூடாது. பயனுள்ள செயல்களில் ஈடுபடுபவனே அனைவரின் போற்றுதலுக்குரியவனாக திகழ்வான். (மகான் மகாவீரர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar