பதிவு செய்த நாள்
30
நவ
2016
11:11
உடுமலை: உடுமலை கோவில்களில் நடந்த, 108 வலம்புரி சங்காபிேஷக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சோமவாரக்கிழமைகளில் சங்காபிேஷகம் நடைபெறு கிறது. இந்த ஆண்டு நேற்று இந்நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு விநாயகர் பூஜை, சங்கு பூஜையும், காலை 11:00 மணிக்கு, 108 வலம்புரி சங்காபிேஷகமும், பகல், 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரமும் இடம் பெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் வெற்றிச்செல்வன், தக்கார் சங்கரசுந்தரேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.
சித்தாண்டீஸ்வரர் கோவில்: உடுமலை ஏரிப்பாளையத்தில் சித்தாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. தமிழகத்தில் தெற்கு நோக்கியும், சுயம்புவாகவும் அமைந்திருக்கும் ஒரே ஒரு சிவஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் கார்த்திகை மாத சோமவார தினமான நேற்று மாலை, 4:00 மணிக்கு 108 வலம்புரி சங்கு அபிேஷகம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீஸ்வரன் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.