பதிவு செய்த நாள்
30
நவ
2016
11:11
திருப்பதி: திருமலையில், உண்டியல் காணிக்கையாக, 7.23 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கையால், கோவில் உண்டியல்களில், பலரும் பணம் செலுத்தி வருகின்றனர். திருமலையில், உண்டியல் மூலம் தினமும், சராசரியாக, இரண்டு கோடி ரூபாய் கிடைக்கும்; இது, தற்போது, மூன்று கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.கடந்த இரு நாட்கள் மட்டும், உண்டியல் மூலம், 7.23 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. திருப்பதி அருகில் உள்ள காணிப்பாக்கம், ஸ்ரீகாளஹஸ்தி, திருச்சானுார் கோவில் உண்டியல் வருமானமும் அதிகரித்துள்ளது.