கிருஷ்ணராயபுரம்: மகிளிப்பட்டி பகவதிஅம்மன் கோவில் வளாகத்தில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், பஜனை பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிந்தலவாடி அடுத்த மகிளிப்பட்டி பகவதி அம்மன் கோவில் வளாகத்தில், சபரிமலை செல்லும் பக்தர்கள், மாலை அணிந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, மகிளிப்பட்டி சுற்றுவட்டார பகுதி ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பஜனை பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.