உளுந்தூர்பேட்டை : பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் திருத்தேர் வீதியுலாவில் பக்தர்கள் பக்தியுடன் வடம் பிடித்து இழுத்தனர். உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. 9ம் நாள் நிகழ்ச்சியான திருத் தேர் வீதியுலா நேற்று காலை 7.45 மணிக்கு புறப்பட்டு தேரோடும் வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. நேற்று காலை சுவாமி விஸ்வரூப தரிசனம், மதியம் பக்தி உலர்த்துதலும், மாலை 5 மணிக்கு பல்வேறு அபிஷேக ஆரோதனைகளும் நடந்தன.