சபரிமலை கோயில் எல்லா நாட்களிலும் நடை திறக்கப்படுவது இல்லையே ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2016 04:11
ஒரு கோயிலுக்கு மிக முக்கியமான நியதி தினசரி பூஜை முறைதான். கோயில் நிர்வாகிகள் இதற்கு உறுதி அளித்தால்தான் அங்கு, விக்கிரக பி ரதிஷ்டை செய்யப்படும். ஆனால், சபரிமலை பிரதிஷ்டை இதற்கு முற்றிலும் விதிவிலக்கு. அதற்கு காரணமும் இருக்கிறது. சபரிமலை, ஒரு மகா ÷ யாகபீடம். அங்கே, பகவான் யோக நிலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். புராணப்படி, அவரைச் சுற்றி எப்போதும் ரிஷிகளும் யோகிகளும் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆதிகாலத்தில், மகர விளக்கு வைபவத்துக்கு மட்டும்தான் சபரிமலை கோயில் திறக்கப்பட்டது. அந்த நாளில், பகவான் யோக நிலையில் இருந்து வெளிவந்து தனது கண்களைத் திறந்து தரிசனம் தருவதாக ஐதீகம் உண்டு. ஆண்டுகள் கடந்தன. பக்தர்கள் கூட்டமும் அதிகரித்து கோயில் நிர்வாகிகள் பகவானிடம் தேவ பிரச்னம் கேட்டு உத்தரவு பெற்று, 5 நாட்கள், பின்னர் 41 நாட்கள், அதன்பின் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை, இப்போது மாதம் ஒரு முறை என்று கோயில் திறக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் ஐயப்ப தரிசனம்... ஒரு வரு டத்தில் பக்தர்களுக்கு 120+நாட்கள்; மீதம் உள்ள நாட்கள் தேவர்களுக்கு என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது பெரியோர்கள் சொல் லும் கருத்து.