விரதம் ஏற்க கார்த்திகை மாதத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2016 04:11
பழங்காலத்தில் மகர ஜோதி தரிசனம் மட்டுமே சபரி யாத்திரையாக கருதப்பட்டு வந்தது. அப்போதெல்லாம், டிசம்பர் மாத இறுதியில் பக்தர்கள் யாத்திரையைத் துவங்குவர். இதன்படி, ஒருவர் சபரி மலைக்குச் செல்ல வேண்டுமானால், அவருடைய விரத நாட்களை அதற்குள் முடித்து பின்னர் இருமுடி எடுத்துச் செல்ல வேண்டும். இதன்படி செய்ய, அவர், கார்த்திகை மாதம் முதல் நாள் மாலையிட்டால்தான், மகர ஜோதி தரிசனத்துக்கு யாத்திரை மேற்கொள்ள முடியும்.