இதற்கான பதில் ஒரு தனிப்பட்ட கருத்து. ஆனால், சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் சொல்லக்கூடிய கருத்து, நாம் எந்த நல்ல காரியத்துக்கும் கருப்பு அணிவதில்லை என்பது. இதைத்தான் சாஸ்திரமும் சொல்கிறது. நமக்கு சாஸ்திரம் சொன்னதை, மாற்றி அமைக்க எந்தவித அதிகாரமும் இல்லை. க ருப்பு வேஷ்டி அணியும் வழக்கம் எப்போது எப்படி வந்தது என்று தெரியவில்லை. பக்தர்கள் காட்டு வழியில் செல்வதாலோ, அல்லது வேறு காரணங்களாலோ அவர்கள் கருப்பு அணிய ஆரம்பித்து இருக்கலாம். ஆனால், சபரிமலை யாத்திரை மற்றும் பூஜை உட்பட, எந்த வித நல்ல விஷய த்துக்கும், கருப்பு வஸ்திரத்தை தவிர்ப்பது உத்தமம். அதற்கு பதிலாக நீலம், மஞ்சள், காவி அல்லது வெள்ளை நிற வஸ்திரங்களை அணிந் துகொள்ளலாம்.