பதிவு செய்த நாள்
02
டிச
2016
12:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஆசிரமத்தில் பகவான் யோகிராம் சுரத்குமாரின், 98 வது ஜெயந்தி விழாவில், நேற்று நூல் வெளியீடு நடந்தது. யோகிராம் சுரத்குமாரின், 98 வது ஜெயந்தி விழா, திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, நீதியரசர் அருணாசலம் எழுதிய, என் குருவின் புனித திருவடிகளில் என்ற புத்தகம், தெலுங்கு, கன்னட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. மா தேவகி அவர்கள் எழுதிய யோகிராம் சுரத்குமார் தி டிவைன் பெக்கர் என்ற நூல், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. தொடர்ந்து பஜனை, தபலா பக்தி இசை, பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 7:45 மணிக்கு, கிரிவலப்பாதையில் பகவான் வெள்ளி ரத உலா மற்றும் ஆரத்தி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.