பதிவு செய்த நாள்
02
டிச
2016
12:12
திருக்கோவிலுார்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் மகராஜின், 98ம் ஆண்டு ஜெயந்தி விழாவில் நேற்று, அதிஷ்டானத்தில் ஏகாதச ருத்ர ஜபம் நடந்தது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று, காலை, 7:00 மணிக்கு, பிரதான் மந்திரில் கடஸ்தாபனம், மகன்யாசம், ஏகாதச ருத்ரஜபம், யாகசாலை பூஜை, கடம் புறப்பாடு நடந்தது. பின், நுால் வெளியீட்டு விழாவும், பக்தர்களின் பஜனை, அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, சோடசோபவுபசார தீபாராதனை, சற்குருநாத ஓதுவாரின் தேவார நிகழ்ச்சி நடந்தது. மாலை, மும்பை ராமன்சங்கர் குழுவினரின் பக்தி இசையும், அதைத் தொடர்ந்து, கவுதம் பரத்வாஜ் குழுவினரின் பக்திப்பாடல் நிகழ்ச்சி நடந்தது. இரவு வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா, ஆரத்தி நடந்தது.ஏற்பாடுகளை, ஆசிரமத் தலைவர் ஜஸ்டிஸ் டி.எஸ்.அருணாசலம் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.