பதிவு செய்த நாள்
05
டிச
2016
02:12
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தர்மசாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா நடந்தது. கள்ளக்குறிச்சி ராஜாநகர் ராஜகணபதி கோவி லில் தர்மசாஸ்தா மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. கணபதி ஹோமத்துடன் நேற்று முன்தினம் காலை விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், தீபாராதனையுடன் துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை விநாயகர் வழிபாட்டுடன் துவங்கி, வேதிகார்ச்சனை, சூரிய சந்திர பூஜை, நாடிசந்தானம்,
துவாரா பூஜை, மூலமந்திர ஹோமம், திரவிய ஹோமம் நடத்தப்பட்டது. காலை 8:45 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடத்தி, 9:00 மணிக்கு புனித நீரூற்றி மூலஸ்தான கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்து, அன்னதானமும் வழங்கினர். வழிபாட்டினை தேவ் குருக்கள் தலைமையிலான சிவாச்சார்யார்கள் செய்திருந்தனர்.