பாவைநோன்பு என்னும் கன்னியர் விரதம் தமிழகத்தின் மிகப்பழமையான விரதங்களில் ஒன்றாகும். இவ்விரதத்தின் அடிப்படை நோக்கம், நாடு செழிக்க நல்ல மழை வேண்டும் என்பதும், நோன்பு நோற்கும் கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதுமாகும். ஒரு காலத்தில் இந்த விரதம் “தை நீராடல்” என்ற பெயரில் தை மாதத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. பின்னாளில் இது மார்கழியில் கடைபிடிக்கப்பட்டது. தற்போது இந்த விரதம் தனுர்மாத விரதம் என்று மாறி விட்டது. அனுமன் ஜெயந்தி மார்கழி அமாவாசையும், மூல நட்சத்திரமும் இணையும் நாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாப்படும். இந்நாளில் விரதமிருந்து ஸ்ரீராமஜெயம் அல்லது ராம ராம என்னும் மந்திரங்களை ஜெபிப்பது நன்மையளிக்கும். நினைத்தது நிறைவேற அனுமனுக்கு துளசி, வெற்றிலை, வடைமாலை அணிவித்தும், வெண்ணெய் சாத்தியும் வழிபடுவர். பிரிந்த தம்பதியர் மீண்டும் சேர ராமாயண சுந்தரகாண்டம் படிப்பது நல்லது.