பதிவு செய்த நாள்
10
டிச
2016
12:12
ராசிபுரம்: கல்லாங்குலம் அண்ணாமலையார் திருக்கோவில், கார்த்திகை தீப பெருவிழா, வரும், 12ல் நடக்கிறது. ராசிபுரம் அடுத்த, கல்லாங்குளம் அருள்மிகு உண்ணாமுலையம்மன் உடனமர், அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீப பெருவிழா, வரும், 12ல் நடக்க வுள்ளது. இதை முன்னிட்டு, கடந்த 3 காலை, 6:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தீப திருவிழா அன்று,
3,842 அடி உயரத்தில் உள்ள போதமலை உச்சியில், கார்த்திகை தீபம் ஏற்றப்படவுள்ளது. தீபத்திற்கு நெய் வழங்குபவர்கள், கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.