பதிவு செய்த நாள்
12
டிச
2016
12:12
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக செல்கின்றனர். ஆண்டாள்கோயில், குற்றாலம், ஆரியங்காவு,குளத்துப்புழா என முக்கிய கோயில்கள் இவ்வழித்தடத்தில் இருப்பதால் பெரும்பாலானவர்கள் கார்,வேன். பஸ்களில் பயணிக்கின்றனர். துவக்கத்தில் குறைந்தளவு பக்தர்களே ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக சபரிமலை சென்று வந்தநிலையில், கடந்த சில நாட்களாக அதிகரிக்கத்துவங்கியுள்ளது. நேற்று சபரிமலைக்கு சென்று விட்டு சொந்தஊருக்கு திரும்பும் வழியில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்கோயிலில் அதிகளவில் வெளியூர் பக்தர்கள் ரிசனம் செய்தனர். இதனால் நேற்று தெற்குரதவீதி, கீழரதவீதி, கோயில் மாடவீதிகளில் வாகனங்கள் அதிகளவில் காணப்பட்டது. ஓட்டல்கள், டீக்கடைகளில் உணவுப்பொருட்கள் விற்பனை அதிகரித்தது. பால்கோவா வியாபாரமும் சூடுபிடிக்கத்துவங்கியது. சுவீட் ஸ்டால் உரிமையாளர் கார்த்திக் கூறுகையில், “கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது ஐயப்பபக்தர்கள் வருகை குறைவு தான். ஆனால், கடந்த சில நாட்களாக வருகை அதிகரிக்கத்துவங்கியுள்ளது. இன்னும் 10 நாட்களில் பள்ளி அரையாண்டுத்தேர்வுகள் விடுமுறை துவங்குவதால், அதிகம்பேர் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.