பதிவு செய்த நாள்
12
டிச
2016
12:12
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவிலில், இன்று, 1,008 மஹா சங்காபிஷேகம் நடைபெறுகிறது. திருக்கழுக்குன்றம், திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை நான்காம் சோமவாரம், 1,008 மகா சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு, மஹா சங்காபிஷேகம், இன்று நடைபெறுகிறது. காலை, 7:00 மணிக்கு சங்கு அலங்காரம், 9:00 மணிக்கு, யாகசாலை பூஜை , பகல், 2:00 மணிக்கு பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, மாலை, 3:00 மணிக்கு, 1,008 மகா சங்காபிஷேகம் நடைபெறுகிறது. மேலும், விழாவை ஒட்டி, மலர் அர்ச்சனை தீப துாப ஆராதனை மற்றும் இரவு 7:00 மணிக்கு சொக்கபனை தீபம் ஏற்றப்படுகிறது.