Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
என்ன சாப்பிடலாம்! உங்களுக்கு நல்ல காலம் எப்போது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மந்திர பூஜை மகிமை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2016
03:12

ஒருமுறை காமாட்சியம்மன் கோவிலுக்கு வந்த காஞ்சிப் பெரியவர்  கஜபூஜை, கோபூஜை, அம்பாள் தரிசனம் செய்தார். பின் பிரகாரத்தை வலம்  வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த இளைஞர் கண்ணன் சாஸ்திரி பெரியவரை வணங்கினார். அப்போது பெரியவர், “நீ எனக்கு ஒரு  உதவி செய்வாயா?” என்றார். அதற்கு கண்ணன் சாஸ்திரி, “பெரியவா சொல்லுங்கோ நீங்க சொல்றதை செய்ய சித்தமா இருக்கேன்,” என்று  பதிலளித்தார். அதற்கு பெரியவர்,“நீ தினசரி அம்பாளுக்குரிய பஞ்சதசி, நவாக்ஷரி மந்திரம் சொல்லி பூஜை செய். பிரசாதத்தை மடத்திற்கு கொடுத்து  அனுப்பு,” என்றார்.  மறுநாள் முதல் கண்ணன் சாஸ்திரியும் மந்திர பிரசாதத்தை பெரியவருக்கு அளித்து வந்தார். பெரியவர் சித்தியடைந்த அன்று  காலையிலும் கண்ணன் சாஸ்திரி பிரசாதம் கொடுத்தார். அப்போது, “காமாட்சிக்கு செய்யும் இந்த கைங்கர்யத்தை (சேவை) நீ விட்டுடாதே,’’ என்றும்,  ‘‘காமாட்சி உனக்கு துணை இருப்பா.  நீ அளித்த பிரசாதத்தால் தான் எனக்கு தெம்பு கெடச்சுது,” என்றும் சொல்லி ஆசியளித்தார். அன்று பிற்பகலில் பெரியவர் சித்தியானதை அறிந்த கண்ணன் சாஸ்திரி கதறி அழுதார்.
 
“பெரியவாளுக்கு  பிரசாதம் கொடுக்க நான் என்ன தவம் செய்தேனோ.” என்று அவரது உள்ளம் உருகியது. இன்றும் காஞ்சிபுரம் கோவிலில்  கண்ணன் சாஸ்திரி பக்தர்களுக்கு பிரசாதம் அளித்து வருகிறார். மற்றொரு அதிசய சம்பவத்தையும் கேளுங்கள்.  சாதுர்மாஸ்ய விரத காலங்களில்  (ஆனி புரட்டாசி மாதங்களில் துறவிகள் விரதம் இருக்கும் காலம்) காஞ்சி மடத்தில், திருவாரூர் மாவட்டம் திருச்சேறை கிருஷ்ணமூர்த்தி பிள்ளை  என்பவரின் நாதஸ்வர கச்சேரி நடப்பது வழக்கம். காஞ்சிப்பெரியவரிடம் அளவற்ற பக்தி கொண்ட இவர் ஒரு சமயம், காஞ்சிபுரம் வர இயலாமல்  போனது.  ஒரு கையும், காலும் விளங்காமல் போனதே அதற்கு காரணம்.  விஷயம் அறிந்த பெரியவர் அவரது கனவில் தோன்றி, “பயப்படாதே. நீ   குணம் பெற்று முன் போலவே ஆவாய்.  ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அதில் குங்குமத்தைக் கலக்கிக் கொள். அதை  கிழக்கில் இருந்து மேற்காக  தினமும் உடம்பில் தடவு. தினமும் இதைச் செய்து வர விரைவில் குணம் பெறுவாய்,” என்று அருள்புரிந்தார். மகிழ்ந்த பிள்ளையும் அதன்படியே   செய்ய அவரது உடல்நலம் பெற்றார். பெரியவருக்கு நன்றி தெரிவிக்க மடத்திற்கு நேரில் வந்தார். மனிதவடிவில் தோன்றிய தெய்வமான பெரிய வரை வணங்கி ஆனந்தக்கண்ணீர் வடித்தார். அதன் பின் தன் இசைப்பணியையும் தொடர்ந்தார். பெரியவர் அவருக்கு ஒரு காமாட்சியம்மன் படத்தை பிரசாதமாக வழங்கினார். பெரியவர் அளித்த அந்த  படத்தை  பொக்கிஷமாக கருதி அவரது குடும்பத்தினர் பூஜித்து  வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar