Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மந்திர பூஜை மகிமை! தீர்த்த சங்கமம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உங்களுக்கு நல்ல காலம் எப்போது பிறக்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2016
03:12

*பயம், சந்தேகம்,சோம்பல் போன்ற தீய குணங்கள் மனிதனின் மனதிற்குள் பகைவர்களாக இருக்கின்றன.  இந்த பகைவர்கள் அழிந்தாலே, உ ங்களுக்கு வாழ்வில் நல்லகாலம் பிறந்து விடும்.
*தெய்வத்தை வழிபடுங்கள். பயம் சிறிதும் வேண்டாம். நல்ல காலம் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. ஒளி, வலிமை, அழகு, மகிழ்ச்சி  என எல்லா நலன்களும் உங்களைச் சேர்கிறது.
*வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும், கூட்டத்திலும், எதிலும், எப்போதும் நேர்மையைப் பின்பற்றுங்கள். உண்மையை மட்டும் பேசுங்கள். பி றரை ஏமாற்றவோ, பிறரிடம் ஏமாறவோ இடம் கொடுக்காதீர்கள்.
*ஆன்மிகத்தின் அடிப்படையே உண்மை தான். சாஸ்திரங்களுக்கெல்லாம் வேராகவும் உண்மை இருக்கிறது. பரமாத்மா என்னும் கடவுளின்  கண்ணாடி அதுவே. அதனால் எல்லா விஷயங்களிலும் உண்மையாக நடந்து கொள்ளுங்கள்.
*தன்னுள்  உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே கண்களைப் பெற்றவன் என்பதே நம் முன்னோர் கொள்கை.   நான், நீ, முதலை,  ஆமை, ஈ, கருடன், கழுதை என உலகிலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் ஒரே உயிர். அந்த உயிரே தெய்வம்.
*கோவில் வழிபாட்டால் ஊர் ஒற்றுமை  நிறைவேறும். வீட்டு வழிபாட்டால் குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
*தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்புகிறபடி மாற விரும்பினால், தியானப்பயிற்சியால் அதை அடைய  முடியும்.
*உள்ளத்தில் நல்ல எண்ணங்களை வளர விட வேண்டும், தீய எண்ணங்கள் மனதில் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
*ஆன்மிகத்தில் நம்பிக்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் தியானம் செய்வதை கடமையாகக் கொள்ளுங்கள். தியானம் என்பது உணவைக்  காட்டிலும் இன்றியமையாதது.
*ஊற்றில் இருந்து தெளிந்த நீர் ஊறுவது போல தியானத்தின் மூலம் தெளிந்த அறிவும், ஆற்றலும் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறை÷ வறும். அனுபவத்தின் மூலம் மட்டுமே இதை உணர முடியும்.
*‘காலம் பணவிலை உடையது’. இதை நம்மவர்கள் உணரவே இல்லை. பொழுது வீணாக்கப்படுமானால் அதற்குரிய லாபம் கிடைக்காமல் போ ய்விடும்.
*செய்ய வேண்டியதை நாளைக்குச் செய்யலாம் என்று தள்ளிப் போடக்கூடாது. மனதில் தோன்றியவுடன் சூட்டோடு பணியில் ஈடுபடுங்கள். இதன்  மூலம் செயல்கள் தடையின்றி நிறைவேறுவதைக் காண்பீர்கள்.
*பேச்சில் ஒரு மாதிரியாகவும், செயலில் வேறொரு விதமாகவும் உள்ளவர்களுடன் கனவில் கூட உறவு வைத்துக்கொள்ள வேண்டாம்.
*நம்முடைய முயற்சியை தொடக்கத்தில் பலரும் கேலி செய்வார்கள். ஆனால்,
நம்பிக்கையைக் கைவிடாமல் இருந்தால் காலப்போக்கில், அவர்களே உதவ முன்வருவார்கள்.
*எத்தனை இடையூறுகள் குறுக்கிட்டாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக  நில்லுங்கள். இப்படிப்பட்ட குணம் கொண்டவர்களே சிறந்த  மனிதர்கள்.
*வாக்கு கொடுப்பது என்பது யாருக்கும் எளிதானது. ஆனால், அதை நிறைவேற்றுவது மிகக் கடினமானது.
*கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, தீமை என்று தெரிந்த பின்னும் நல்வழியில் செல்லாமல் இருப்பது அறிவீனம்.
*அன்பால் பகை அழியும். இன்பம் உண்டாகும். எங்கும், எப்போதும் எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள்.  (மகான் மகாகவி பாரதியார்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar