Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரான்மலையில் கார்த்திகை தீபம் திருக்காமீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா திருக்காமீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நள்ளிரவில் கருவறை திறக்கப்பட்டு பூஜை செய்யப்படும் மத்தியபுரீஸ்வரர் கோவில்!
எழுத்தின் அளவு:
நள்ளிரவில் கருவறை திறக்கப்பட்டு பூஜை செய்யப்படும் மத்தியபுரீஸ்வரர் கோவில்!

பதிவு செய்த நாள்

13 டிச
2016
11:12

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் புகழ் பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை அடுத்த பரக்கலக்கோட்டையில் பொதுஆவுடையார் (மத்தியபுரீஸ்வரர்) கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத சோமவார திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாத நான்கு சோமவார நிகழ்ச்சியின் போதும் நள்ளிரவு இரண்டாம் ஜாமத்தில் பொது ஆவுடையாருக்கு சிறப்பு பூஜை நடந்தப்படும். மற்ற கோயில்களில் நடைசாற்றப்படும் நேரத்தில் இக்கோயிலில் நடை திறக்கப்பட்டு அதிகாலை நடைசாற்றப்படும். சோமாவார நாள் தவிர மற்ற நாட்களில் கதவு மூடப்பட்டு, கதவுகளுக்கு பூக்கள் சூடி பூஜைகள் நடத்தப்படும். வெண் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மத்தியஸ்தம் செய்ததால் வெண் ஆலமரமே ஸ்தல விருச்சமாக வணங்கப்படுகிறது. மரத்தின் வேரில் சந்தனம் பூசி, அதன் மேல் நெற்றிப்பட்டம், நாசி, திருவாய், முன்புறம் திருவாய்ச்சி அமைத்து சிவலிங்க வடிவில் இருப்பதை பக்தர்கள் வழிபட்டனர். சோமவார திருநாள்களில் மரத்தின் இலைகளை பக்தர்கள் பறித்து செல்வது வழக்கம்.  

அதேபோல், இந்தாண்டு கடந்த நவம்பர் 21ம் தேதி முதல் சோமவார திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கடைசி சோமவார தினத்தில் விசேஷ பூஜைகள் செய்து, தீபராதனைகள் காண்பிக்கப்பட்டு பிறகு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பொதுஆவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. வரும் டிசம்பர் 19 ம் தேதி விடையாற்றி உற்சவ விழா நடைபெறுகிறது. வருடத்தில் ஒருநாள் பொங்கல் பண்டிகைய அன்று மட்டும் பகலில் நடை திறந்திருக்கும். விழாவிற்கு தஞ்சை, நாகை, திருவாரூர்,மதுரை போன்ற வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் சுமார் காலை முதல் இரவு வரை 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு, தங்கள் கொண்டு வரும் நவதானிங்கள், ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை காணிக்கைகளாக செலுத்தியும் பொதுஆவுடையாரை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணன், பரம்பரை அறங்காவலர்கள் சடகோபராமானுஜம், ராமானுஜம் மற்றும் பரக்கலக்கோட்டை கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில், கோடைகாலத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு சுவையான எலுமிச்சை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar