வில்லியனுார் : கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில், லட்ச தீப விழா நேற்று நடந்தது. லட்ச தீப விழாவை முன்னிட்டு சாமிக்கு, நேற்று காலை, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில் கோவில் வளாகம் மற்றும் குளக்கரை உள்ளிட்ட பகுதியில் ஒரு லட்சம் அகல் விளக்கு ஏற்றப்பட்டது. இவ்விழாவில் அமைச்சர் நமச்சிவாயம், இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல், வட்டார காங்., தலைவர் அய்யூப் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். லட்ச தீப விழாவிற்கான ஏற்பாடுகளை உபயதாரர் அன்பு குடும்பத்தினருடன் சிவனடியார் மற்றும் சிவாச்சாரியர்கள் செய்தனர்.