பதிவு செய்த நாள்
13
டிச
2016
12:12
விழுப்புரம்: கார்த்திகை தீபத்தை யொட்டி விழுப்புரம் பகுதி கோவில்களில், நேற்று மாலை சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கார்த்திகை தீபத்தை யொட்டி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை ௬:௧௦ மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி, விழுப்புரம் ரங்கநாதன் ரோடில் உள்ள சித்திவிநாயகர் கோவிலில் அமைந்துள்ள விநாயகர், முருகன், சரஸ்வதி, கஜலட்சுமி, துர்கை, ஆஞ்சநேயர், ஐயப்பன், தட்சணாமூர்த்தி உள்ளிட்ட சுவாமிகளுக்கு, மாலை ௫:௩௦ மணிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதையடுத்து மாலை ௬:௧௦ மணிக்கு சொக்கப்பனையை தீயிட்டு கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ௬:௨௦ மணிக்கு தீபாராதனை நடந்தது. இதே போல் வண்டிமேடு ஸ்ரீஅபிநவ மந்த்ரலாயத்தில் அமைந்துள்ள ராகவேந்திரர் கோவிலில் ௧௦௦௮ விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் கைலாசநாதர், ஆதிவாலீஸ்வரர், பசுபதீஸ்வரர், வீரவாழிமாரியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.