அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் மிலாடி நபியை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நடந்தது. முகமது நபி (ஸல்) பிறந்த நாளை முன்னிட்டு, அவலுார்பேட்டை மசூதியில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. ஹஸரத் முஸ்தகீம் தினசரி 12 நாள் வரை இஷா தொழுகைக்கு பின்னர், நபிகள் நாயகம் பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான வாழ்க்கை முறையினை சிறப்பு சொற்பொழிவாற்றினார். முத்தவல்லி ஹாஜிபாஷா மற்றும் ஜமாத்தினர் திரளாக கலந்து கொண்டனர். தப்ரூக் வழங்கப்பட்டது.