நரிக்குடி : நரிக்குடி அருகே வீரசோழனில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா, மிலாடி நபி விழா, கந்துாரி விழா என முப்பெரும் விழா நடந்தது. இஸ்லாமிய உறவின்முறை டிரஸ்ட் தலைவர் முகம்மது யூசுப் தலைமை வகித்தார். முதல் நாள் நிகழ்ச்சியாக திங்கள் இரவு சிறப்பு கூட்டம் நடந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலம் நடந்தது. அரபிக் கல்லுாரி முதல்வர் அப்துல் காதிர் பாகவி ஹஜ்ரத் கொடியேற்றி துவக்கி வைத்தார். ஊர்வலம் பெரிய பள்ளிவாசலில் துவங்கி பள்ளி வாசல் வந்தடைந்தது. டிச. 25 ல் கந்துாரி விழா நடைபெற உள்ளது. இஸ்லாமிய உறவின்முறைடிரஸ்ட் போர்டு நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.