பிள்ளையார்பட்டி கோயிலில் கூடுதல் நேரம் நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2016 12:12
திருப்புத்துார், பிள்ளையார்பட்டி விநாயர் கோயில் நடைதிறப்பு தினமும் காலை 6 முதல் மதியம் 1 மணி வரை இருக்கும். அதேபோல் மாலை 3 முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும். சபரிமலை, பழநி பக்தர்கள் வசதிக்காக தற்போது மதியம் நடை சாத்தப்படுவதில்லை. மேலும் மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று முதல் கூடுதல் நேரம் நடை திறக்கப்பட உள்ளது. பரம்பரை அறங்காவலர்கள் பெரியகருப்பன், மாணிக்கவாசகன் கூறுகையில், “மார்கழி பூஜைக்காக அதிகாலை 5 மணிக்கே நடை திறக்கப்படும். வழக்கமான பூஜைகளும் நடக்கும். இந்த நடை திறப்பு தைப்பூசம் வரை இருக்கும்,” என்றனர்.