Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குருவாயூர் தெய்வம் இந்து மத சாஸ்திரங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குரு பலம் அருளும் திருலோக்கி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2016
05:12

ஏமம் என்ற சொல்லுக்கு பொன் என்றொரு பொருளும் உண்டு. நவகிரகங்களில் குருபகவான் என்றழைக்கப்படும். பிரஹஸ்பதிக்கு பொன்னவன் என்று பெயர். அப்படி குரு வழிபட்டு அருள் பெற்றதால் அவ்வூருக்கு ஏமநல்லூர் என்ற பெயர் உண்டாயிற்று. காவிரியின் வடகரையில் அமைந்த இந்த ஏமநல்லூரில் அருளாட்சி புரியும் சுந்தரேசப்பெருமானது லிங்கத் திருமேனிக்கு குருபகவான் விசேஷமாக வழிபாடு செய்தார். பசுநெய்யால் விளக்கேற்றினார். கொன்றை மாலை அணிவித்து முல்லைப்பூவால் அர்ச்சனை செய்தார். தயிர் அன்னம் நிவேதனம் செய்து பெருமானது திருவருளை வேண்டினார். அவரது அன்பான பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு அனுக்கிரஹம் செய்தார். ப்ரஹஸ்பதியே! பூலோகத்தில் வாழ்பவர்கள் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்த நீ முக்கிய காரணமாக இருப்பாய்; உமது பார்வை மூலம் எல்லாவிதமான தோஷங்களும் விலகி குருபலம் பெற்று இனிய இல்லறம் அமைய உமது பலம் பெருகட்டும் என்று அருள்புரிந்தார். குரு இப்படி சுந்தரேச்வரப் பெருமானிடம் அனுக்கிரஹம் பெற்ற இனிய நாள் சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரம் (குருவின் பிறந்த நட்சத்திரம்) ஆகும். குருபகவான் சிவனருளால், குருபலம் பெற்ற அற்புதமான திருத்தலமே ஏமநல்லூர்.

அப்பர் தமது திருத்தாண்டகப் பாடலில் இத்தலத்தை வைப்புத்தலமாகப் போற்றுவார். இன்று இத்தலத்தின் பெயர் திருலோக்கி என்பதாகும். தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனது அருமை மகன் கங்கை கொண்ட சோழனாகிய ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு ஒன்றில் இத்தலம் இராஜேந்திர சிம்ம வளநாட்டு மண்ணி நாட்டு ஏமநல்லூராகிய திரைலோக்கி மாதேவி சதுர்வேதிமங்கலம் என்று குறிப்பிடப்படுகிறது. ராஜராஜ சோழனது பட்டத்து அரசிகளில் ஒருத்தி திரைலோக்கிய மாதேவி என்ற பெயர் உடையவள். அவளது பெயரில் வேதம் பயில வல்லார்க்கு ராஜேந்திர சோழன் இவ்வூரைத் தானமாக வழங்கினான்.

கும்பகோணம் - அணைக்கரை வழியில் திருப்பனந்தாள் அருகில் 5 கிலோ மீட்டரில் திருலோக்கி அமைந்துள்ளது. சூரியனார் கோயில், துகிலிவழியாகவும் இத்தலத்தை அடையலாம். இங்குள்ள அகிலாண்டேச்வரி சமேத சுந்தரேச்வரர் திருக்கோயிலில் குருபகவானுக்கு ரிஷபவாகனத்தில் காட்சியளித்த உமாமகேச்வர வடிவம் தமிழகத்தில் வேறு எங்கும் காண இயலாத மிகமிக அற்புதமான வடிவமாகும். இந்தத் திருக்கோலத்தைத் தரிசிக்கவே பல்லாண்டுகள் தவமிருந்ததுபோல் அருகில் கிழக்கு நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிக்கொண்டு நவகிரக குருபகவான் பக்திப் பரவசத்துடன் காட்சியளிக்கும் பாங்கே அலாதி! சாதாரணமாக எல்லா தலங்களிலும் அபய முத்திரையுடன் காட்சியளிப்பார் குரு. ஆனால், இங்கே மட்டும் அஞ்சலி முத்திரையில் கும்பிட்ட பெருமானாகக் காட்சியளிப்பது அவர் பெற்ற பேரானந்தத்தின் விளைவுதானே! இது மட்டுமா! இந்தப் பீடத்தின் பின்புறம் சிவலிங்க வடிவைக் காணும் போது நம்மால் நன்றாகவே உணர முடிகிறது. குரு சிவலிங்க வடிவை பூஜை செய்ததன் பலனாக, பெருமான் அதிலிருந்து ரிஷபவாகனத்தில் உமா மகேச்வரராகத் தோன்றி அம்பிகையை ஆலிங்கனம் செய்த அழகு வடிவில் காட்சி கொடுத்தான் என்பதைக் கண்டு மெய்சிலிர்க்கிறோம். குரு பூஜித்து பேறு பெற்று குருபலம் அருளும் ஒப்பற்ற தலம் திருலோக்கி மட்டுமே என்பதில் ஐயம் உண்டோ?

இந்த தெய்விக வடிவைக் கண்டு இன்புற்ற கருவூர்த்தேவர் சுந்தரன் சுந்தரியுடன் விளங்கும் திரைலோக்கிய சுந்தரனை காந்தாரப் பண்ணில் திருவிசைப்பாவில் பாடி மகிழ்கிறார். இந்தத் தமிழ் மாலையை இசையோடு பாடி வழிபடுவோர் இனிமையான இல்லற வாழ்க்கையைப் பெற்று நல்லறங்கள் பல புரிந்து இன்புறுவர் என்று கருவூர்த்தேவர் இப்பதிகத்தில் போற்றுகிறார். இவரது திருவுருவத்தை இக்கோயிலின் வெளிமண்டபத்தூணில் கண்டு இன்புற முடிகிறது. குருபகவான் காட்சிபெற்ற உமாமகேச்வரருக்கு எதிரில் ஓர் அழகு தம்பதி எழிலுடன் நிற்கின்றனர். அவர்கள் வேறு யாருமல்ல! ரதி - மன்மதன் இருவருமே! அவர்களின் இருபுறமும் இரண்டு மங்கையர். திருவாசி (பிரபை)யுடன் ஐந்தடி உயரத்தில் மிருதுவான கல்லில் நேர்த்தியாக வடிக்கப்பட்ட தெய்விக காதலர் சிலை ஹொய்சாலர் காலத்து கலைக்கருவூலம். பேலூர், ஹளபேடு கோயில்களை இது நினைவுபடுத்துகிறது. மூலஸ்தானத்தில் சுந்தரேச்வர பெருமானை தரிசித்து வெளிமண்டபத்தில் அகிலாண்டேச்வரி அம்பிகையை வழிபட்டு வலம் வரும்போது தட்சிணாமூர்த்தி, முருகப் பெருமான், விச்வநாதர், பைரவர், சண்டிகேச்வரரையும் வணங்கி மகிழலாம். தலவரலாற்றுப்படி பிருகு முனிவர் வழிபட்டதும், தருமன் என்பவனது ஊமைத் தன்மை நீங்கப்பெற்ற பெருமையுடையுமான இத்திருக்கோயில் கணித சக்ரவர்த்தியால் கட்டப் பெற்ற பெருமையுடையது.

கருவூரார் அறக்கட்டளையின் பெரும் முயற்சியாலும் உள்ளூர் பக்தரின் பேரார்வத்தாலும் ஒத்துழைப்பாலும் புதிதாக ராஜகோபுரம் கட்டப்பெற்று சென்ற ஆண்டு 26.10.2015 அன்று மகாகும்பாபிஷேகம் நிறைவு பெற்றுள்ளது. குருபலம் பூரணமாக அமைய கல்யாணத்துக்குக் காத்திருக்கும் ஆண்களும், பெண்களும் அன்றைய தினம் திருலோக்கி தலத்துக்கு வந்து, உமாமகேச்வரப் பெருமானையும், குரு பகவானையும் தரிசித்து இனிய இல்லற வாழ்வு அமையப் பெற்று இன்பமடையலாம். திருமணமாகியும் மணவாழ்க்கையில் பிரச்னையுள்ளவர்களும் தரிசித்து தீர்வு பெறலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar