Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில்களில் ஸ்தல விருட்சங்கள் ... கண்ணனின் ரதயாத்திரை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சீரான வாழ்வு தரும் சிவராத்திரி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2016
05:12

சிவராத்திரி, இந்தப் பெயருக்கு அர்த்தம், சிவனுக்கு உகந்த இரவு என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், சிவம் என்றால் அருள்பவர் என்றும், ராத்ரம் என்றால் மங்களம் எனவும் பொருள். சர்வ மங்களங்களையும் சர்வேசன் அருளக்கூடிய தினம் என்பதுதான் சிவராத்திரி என்பதன் உண்மையான அர்த்தம்! ஊழிக்குப் பிறகு உலகத்தில் உயிர்களே இல்லாமல் எங்கும் இருள் பரவி இருந்த காலம் அது. உயிர்கள் அனைத்துக்கும் தாயான ஜகன்மாதா, அவை அனைத்தும் மீண்டும் தழைக்க சிவனை எண்ணித் தவம் இருந்ததை நினைவுகூர்வதே சிவராத்திரி விரதம். அன்று நான்கு காலபூஜைகள் இரவில் நடக்கும், இதனை ஜாமபூஜை எனவும் சொல்வதுண்டு. ஒவ்வொரு ஜாமத்திலும் விசேஷ அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள், துதிகள், நைவேத்யங்கள் செய்யப்படும். ஒவ்வொரு காலத்திலும் இறைவனை வணங்குவது வெவ்வேறு பலன்களைத் தரும் என்றும், சிவராத்திரி பூஜைகளை முழுமையாக தரிசிப்பது சிறப்பான வாழ்வுடன் பதினாறு பேறுகளையும் அளிக்கும் என்பது ஐதிகம். சிவராத்திரி அன்று இறைவனை எந்த ஜாமத்தில் எப்படி ஆராதிப்பது? என்ன பலன் கிட்டும்?

முதல் காலம் அல்லது ஜாமத்தில் வழிபட வேண்டிய வடிவம் சோமாஸ்கந்தர். இவருக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து வில்வ மாலை சாத்தி, தாமரை அலரியால் அர்ச்சித்து, பருப்பு சாதம் நிவேதனம் செய்து வணங்கவேண்டும். ரிக்வேத துதிகளைப் பாடுவது. சிவபுராணம் ஓதுவதும் சிறப்பு. இதன் பலனாக குடும்பத்தில் நிம்மதி நிலவும். இரண்டாம் காலபூஜையில் தட்சிணாமூர்த்தியை ஆராதிக்கவேண்டும். பஞ்சாமிர்த அபிஷேகம், குருந்தை மலர் அலங்காரம், துளசி அர்ச்சனை, பாயசம் அல்லது சர்க்கரைப்பொங்கல் நிவேதனம் இந்தக் காலத்தில் யஜுர் வேத துதிகளையும் கீர்த்தி திரு அகவலையும் பாராயணம் செய்யலாம். இந்த தரிசனத்தின் பலனாக ஞானமும் கல்வியும் சிறக்கும்.

மூன்றாம் காலம் - லிங்கோற்பவ காலம் இது. தேன், பால், தீர்த்த அபிஷேகம்; கிளுவை, விளா அலங்காரம்; மூவிதழ் வில்வம், சாதிப்பூ அர்ச்சனை; எள் அன்னம், மாதுளம்பழம், நிவேதனம், லிங்காஷ்டகம் முதலான சிவதுதிகள், சாம வேத ஸ்லோகங்களைச் சொல்லலாம். இதன் பலனாக ஆரோக்யம் நிலைக்கும் அந்தஸ்து உயரும்.

நான்காம் காலத்தில் சந்திரசேகர வடிவினராக ரிஷபாரூடர் கோலத்தில் ஈசனை வணங்கவேண்டும். கரும்புச்சாறு, பன்னீர் அபிஷேகம், கருநொச்சி அலங்காரம், நந்தியா வட்டை அர்ச்சனை, வெண்சாதம் நிவேதனம் செய்யவேண்டும். சகலவிதமான பழங்களும் நிவேதிக்கலாம். அதர்வணவேத மந்திரங்கள் ஓதுதல், கீர்த்தி திரு அகவல், போற்றி திருத்தாண்டகம் போன்றவற்றைச் சொல்லலாம். இந்த தரிசனம், தீவினைகள் மாற்றி, தெய்வீகம் நிறைந்திடச் செய்யும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar