வாலாஜாபேட்டை: வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், சுவாமிக்கு, 108 மூலிகை தீர்த்தாபிஷேகம் நடந்தது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், உலக மக்கள் நன்மைக்காக நேற்று, தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமம், நவகலச திருமஞ்சனம் மற்றும், 108 மூலிகை தீர்த்தாபிஷேகம் நடந்தது. இதை, முரளிதர சுவாமிகள் செய்தார். சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.