ஜல்லிக்கட்டு நடக்க தெய்வத்திடம் முறையீடு: டிச.23ல் பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2016 11:12
அலங்காநல்லுார்: ஜல்லிக்கட்டு நடக்க வேண்டி அலங்காநல்லுார் மக்கள் டிச.,23ல் சிறப்பு யாகம், வேள்வி பூஜை மூலம் தெய்வத்திடம் வேண்டுதல் செய்கின்றனர். தைமாதம் முதல்நாள் அவனியாபுரம், இரண்டாம் நாள் பாலமேடு, மூன்றாம் நாள் அலங்காநல்லுாரில் பல தலைமுறைகளாக ஜல்லிக்கட்டு நடந்து வந்தது. அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு மாவட்ட நிர்வாகம் சார்பிலும், பாலமேட்டில் கிராம பொதுமகாலிங்கசுவாமி மடத்துக்கமிட்டி சார்பிலும் நடத்தப்பட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. அரசியல் கட்சிகளை நம்பி பலனில்லாததால், அலங்காநல்லுார் மக்கள் டிச., 23ம் தேதி கிராம காவல் தெய்வங்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் கணபதி ஹோமம், மகா ருத்ரயாகம் செய்து இரவு திருவிளக்கு பூஜை நடத்துகின்றனர். இதன் தொடக்கமாக நேற்று பந்தல்கால் ஊன்றும் விழா நடந்தது. இதில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்றனர்.