செம்பொற்சோதிநாதர் கோவிலில் சைவப்பாட வகுப்புகள் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2016 02:12
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்த இலவச சைவப்பாட வகுப்புகள் நேற்றுடன் முடிந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருநாவுக்கரசர் திருமடம் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சைவ பாட வகுப்புகள் நடந்து வருகின்றது. சைவ நெறிமுறைகளை விளக்கும் இலவச பாட வகுப்புகள் மாதந்தோறும் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். கோவை பேரூர் மணிவாசகர் அருட்பணிமன்றத்தின் வழிகாட்டுதல்படி வகுப்புகளை வெள்ளக்கோவில் ஞானாசிரியர் திருநாவுக்கரசு பாட வகுப்பினை நடத்தினார். சைவ சித்தாந்த வகுப் பில் பங்கேற்ற அனைவருக்கும் கோவை சைவ நெறியாளர் வகுத்த திருவருட்பயன் குறித்த 4 புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இலவச பாட வகுப்புகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் 120க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். சைவ நெறிமுறை களை விளக்கும் இப் பாட வகுப்பின் 2016-17ம் ஆண்டிற்கான இலவச சேர்க்கை விரைவில் துவங்கப்பட உள்ளது. வகுப்பிற்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி திருநாவுக்கரசர் திருமடம் நாச்சியப்பன் செய்துள்ளார்.