நம் வாழ்வில், நற்செயல்கள் மட்டுமே நடக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. சில சமயங்களில், ஏதேனும் சோதனைகளை சந்திக்கக்கூடும். இன்பம், துன்பம் எது வந்தாலும் ஏற்கக்கூடிய சமநிலையான மனதை இறைவனிடம் கேட்டுப் பெற வேண்டும். இதுகுறித்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தி கொள்வதாகும். மனிதனுக்குரிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையை வேண்டுவதைக் கைவிடுவதாகும். இன்னும் மனிதனுக்குரிய தீமை அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தி அடைவதாகும், என்கிறார்கள்.வாழ்வில் நடக்கும் சோதனையான நிகழ்ச்சிகளுக்காக, இறைவன் மீது அதிருப்தியடைவது மேலும் மேலும் தீமையையே சேர்க்கும். என்ன வந்தாலும், எது நடந்தாலும் அதை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்விடமே சோதனைகள் தீர்வதற்காக பிரார்த்தியுங்கள்.