பதிவு செய்த நாள்
21
டிச
2016
12:12
பவானி: சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல்களில், 2.93 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, சங்கமேஸ்வரர், வேதநாயகி, பெருமாள் சன்னதிகள் உட்பட மொத்தம், 30 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை கோவில் அதிகாரிகள் முன்னிலையில், நேற்று திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. மொத்தம், இரண்டு லட்சத்து, 93 ஆயிரத்து, 659 ரூபாய் செலுத்தப்பட்டிருந்தது. கடந்த, 8ல் காணிக்கை எண்ணப்பட்டது. அப்போது, 9.66 லட்சம் ரூபாய் கிடைத்தது. அடுத்த, 12 நாட்களில், இந்த தொகை கிடைத்துள்ளது. இதில், 500 ரூபாய் நோட்டுகள், 10 இருந்தன. பழைய, 1,000 ரூபாய் நோட்டுகள், இரண்டு மட்டுமே இருந்தது. இதை கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.