வடுவூர் கோதண்டராமர் கோவிலில் லட்சார்ச்சனை, காயத்ரி ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2011 12:10
மன்னார்குடி: வைணவ தலங்களில் புகழ்பெற்ற வடுவூர் கோதண்டராமர் திருக்கோவிலில் ராமர்- லட்சுமணர், சீதை மற்றும் கல்விக்கடவுள் லட்சுமி யவக்கீரிவன் ஆகியோருக்கு லட்சார்ச்சனையும், காயத்ரி ஹோமமும் நடந்தது.ஆண்டுதோறும் நடைபெறும் லட்சார்ச்சனை விழா இந்த ஆண்டும் நேற்று காலை 10 மணிக்கு துவங்கியது. ராமர், லட்சுமணர், ஆகியோர் ஆடை அலங்காரம் செய்யப்பட்டு நறுமலர்கள் சூட்டியநிலையில் பக்தர்கள் காட்சியளித்தனர். குதிரை முகத்தான், பரிமுகத்தான் என்றும் அழைக்கப்படும் கல்வி கடவுள் லட்சுமி யவக்கீரிவன் ஆகியோருக்கும் அலங்காரம்செய்யப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதை தொடர்ந்து ஹோமம், லட்சார்ச்சனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் குமரன் மற்றும் உப்பிலி பிச்சைபட்டு ஆகியோர் செய்திருந்தனர்.